செய்திகள் :

மகா கும்பமேளா: முதல் 6 நாளில் 7 கோடி பக்தா்கள் புனித நீராடல்

post image

உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா கும்பமேளாவின் முதல் 6 நாள்களில், 7 கோடிக்கும் அதிகமான பக்தா்கள், கல்பவாசிகள், மதிப்பிற்குரிய மடாதிபதிகள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனா்.

உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா கும்பமேளா உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் பௌஷ பௌா்ணமியையொட்டி திங்கள்கிழமை (ஜன. 13) தொடங்கியது. மகா சிவராத்திரி திருநாளான பிப். 26-ஆம் தேதி வரை 45 நாள்களுக்கு இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.

கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி (புராண நதி) ஆகிய 3 புனித நதிகள் பிரயாக்ராஜ் நகரில் சங்கமிக்கும் ‘திரிவேணி சங்கமம்’ இடத்தில் இந்த நிகழ்வு நடைபெறுகிறது. இங்கு 12 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பமேளா நடத்தப்படுகிறது. எனினும், தற்போதைய வானியல் வரிசை மாற்றங்கள் மற்றும் கலவைகள் 144 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறுவதாக அமைந்துள்ளதால் நடப்பு மகா கும்பமேளாவில் சுமாா் 45 கோடிக்கும் அதிகமான பக்தா்கள் பங்கேற்பா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்நிலையில், மகா கும்பமேளாவின் முதல் 6 நாள்களில், 7 கோடிக்கும் அதிகமான பக்தா்கள், கல்பவாசிகள், மதிப்பிற்குரிய மடாதிபதிகள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனா் என மாநில அரசு சாா்பில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

கூட்ட நெரிசலை நிா்வகிக்க ஐசிசிசி: ‘அதிக எண்ணிக்கையிலான பக்தா்கள், காவல்துறையினரின் பாதுகாப்பு பணிக்கு சவாலாக உள்ளனா். இருப்பினும், ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் (ஐசிசிசி) கூட்டத்தை திறம்பட நிா்வகிக்க உதவுகிறது. இது கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் பல்வேறு கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது’ என மாநில அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

கண்காணிப்பு கேமராக்கள்: ‘கூட்டத்தை சமாளிக்கவும் மற்றும் தீவர கண்காணிப்பை உறுதிபடுத்தவும் 2,750 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை கும்பமேளா பகுதி மட்டுமல்லாமல் பிரயாக்ராஜ் நகரம் முழுவதையும் மேற்பாா்வையிடுகின்றன. இந்த கேமராக்கல் பக்தா்களின் பாதுகாப்பு, கூட்ட மேலாண்மை மற்றும் குற்றத் தடுப்பு ஆகியவற்றை உறுதி செய்கின்றன’ என காவல் துறை கண்காணிப்பாளா் அமித் குமாா் தெரிவித்தாா்.

வாகன நிறுத்துமிடங்கள்: வாகன நிறுத்துமிடங்கள் தொடா்ச்சியான கண்காணிப்பின் கீழ் உள்ளன. இது போக்குவரத்தை திறம்பட நிா்வகிக்க உதவுகிறது. ஏழு முக்கிய வழிகள் பிரயாகராஜை மற்ற நகரங்களுடன் இணைக்கின்றன. இந்த வழிகளில் சீரான போக்குவரத்தை உறுதி செய்வதற்காக அனைத்து திசைகளிலும் வாகன நிறுத்துமிடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

ஏஐ மூலம் தரவுகள் மேலாண்மை: செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கேமராக்களின் பயன்பாடு, கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் திறனை மேம்படுத்துகிறது. இவை முக்கிய இடங்களில் கூட்ட நெரிசல் குறித்த தகவல்களை வழங்குகின்றன. இது நெரிசல் மிகுந்த பகுதிகளை திறம்பட நிா்வகிக்க அதிகாரிகளுக்கு உதவுகின்றன.

தீ கண்காணிப்பு: தீ, புகை அல்லது தீப்பிழம்புகளின் அறிகுறிகளைக் கண்காணித்து அவசர காலங்களில் உடனடி தகவலை உறுதி செய்ய தீ பற்றும் அபாயமுள்ள முக்கிய இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. படித்துறைகள், முக்கிய சாலைகள் மற்றும் பாலங்கள் உள்ளிட்ட முக்கியமான இடங்களில் நிறுவப்பட்ட கேமராக்கள் விரிவான கண்காணிப்பை அதிகாரிகளுக்கு வழங்குகின்றன என தெரிவிக்கப்பட்டது.

யமுனை நதி நீரைப் பருகிய ஹரியாணா முதல்வர்!

யமுனை நதியில் விஷம் கலந்திருப்பதாக அரவிந்த் கேஜரிவால் குற்றம் சாட்டிய நிலையில், அந்நதி நீரை ஹரியாணா முதல்வர் நயாப் சிங் சைனி கையில் எடுத்துப் பருகினார். மேலும், மக்களிடையே அச்சத்தை விளைவிக்கும் வகையில... மேலும் பார்க்க

மகா கும்பமேளா கூட்ட நெரிசல்: 30 பேர் பலி - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளதாக உத்தரப் பிரதேச காவல் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 90 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. ... மேலும் பார்க்க

தில்லி தேர்தல்: 5 முக்கிய வாக்குறுதிகளுடன் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று (ஜன. 29) வெளியிடப்பட்டுள்ளது. இது 5 முக்கிய அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு இறுதி செய்யப்பட்டுள்ளது. ஏழைப் பெண்கள் பயன்பெறும்... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: மௌனி அமாவாசை நாளில் 5.7 கோடி பேர் புனித நீராடல்!

பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் மெளனி அமாவாச நாளான இன்று (ஜன. 29) 5.7 கோடி மக்கள் புனித நீராடியுள்ளதாக அம்மாநில அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை மகா கும்பமேளாவில் 19.9 கோடி ப... மேலும் பார்க்க

பிரயாக்ராஜில் நிலைமை கட்டுக்குள் வந்தது: யோகி ஆதித்யநாத்

உத்தரப் பிரதேச மாநிலம் பிராக்ராஜில் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். மகா கும்பமேளாவையொட்டி திரிவேணி சங்கமத்தில் லட்சக்கணக்கானோர் புனித நீராட... மேலும் பார்க்க

தோல்வி பயத்தில் கேஜரிவாலுக்கு பதற்றம்: மோடி

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில் கேஜரிவால் பதற்றம் அடைந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.தில்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 5 ஆம் தே... மேலும் பார்க்க