செய்திகள் :

மகா கும்பமேளா கூட்ட நெரிசல்: 30 பேர் பலி - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

post image

மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளதாக உத்தரப் பிரதேச காவல் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 90 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. ஜனவரி 13ஆம் தேதி தொடங்கிய இந்நிகழ்வு பிப்ரவரி 26ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் மூன்று நதிகள் சந்திக்கும் திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் புனித நீராடி வழிபட்டு வருகின்றனர்.

இதனிடையே மௌனி அமாவாசையான இன்று (ஜன. 29) திரிவேணி சங்கமத்தில் லட்சக்கணக்கானோர் புனித நீராட குவிந்தனர். இதன் விளைவாக இன்று அதிகாலை கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

திரிவேணி சங்கமத்தின் கரையோரம் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகள் மீது தாவிக் குதித்ததில் பக்தர்கள் பலர் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து காவல் துறை தலைமை இயக்குநர் வைபவ் கிருஷ்ணா பேசியதாவது,

''அதிக எண்ணிக்கையிலான மக்கள் குவிந்ததால் அதிகாலை 1 - 2 மணியளவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அங்கு அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை மீறி பக்தர்கள் உள்ளே நுழைந்ததால், பலர் சிக்கி படுகாயம் அடைந்தனர்.

இதில் 90 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 30ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

படுகாயமடைந்தவர்களில் 36 பேர் மட்டுமே மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் உள்ளனர். எஞ்சியவர்கள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர்'' எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | தில்லி தேர்தல்: 5 முக்கிய வாக்குறுதிகளுடன் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!

ராகுல் மீதான அவதூறு வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு!

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கு பிப்ரவரி 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சுல்தான்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடகத் தேர்தலின்போது அமித் ஷா குறித்து சர்ச்சைக்க... மேலும் பார்க்க

வீட்டுப் பணியாளர்களுக்கு 7 வாக்குறுதிகள்.. ஆம் ஆத்மி வெளியீடு!

தில்லி தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், அரசு இல்லங்களில் பணிபுரியும் வீட்டுப் பணியாளர்களுக்கு எழு வாக்குறுதிகளை ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. தலைநகரில் பிப்ரவரி 5ல் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையி... மேலும் பார்க்க

குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் 2 ஐபோன்கள் திருட்டு!

திருமண நிகழ்வில் பங்கேற்றபோது குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுனிதா அகர்வாலின் இரண்டு மொபைல் போன்கள் திருடப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுனித... மேலும் பார்க்க

யமுனை நதிநீர் விவகாரத்தில் பாஜகவும், ஆம் ஆத்மியும் நாடகம் ஆடுகிறது: பிரமோத் திவாரி

தில்லியைப் பாதிக்கும் முக்கிய பிரச்னைகளைப் புறக்கணிக்கும் அதேவேளையில் யமுனை நதிநீர் தொடர்பான விவகாரத்தில் பாஜகவும், ஆம் ஆத்மியும் நாடகம் நடத்துவதாக காங்கிரஸ் தலைவர் பிரமோத் திவாரி கடுமையாக விமர்சித்து... மேலும் பார்க்க

ஜிபிஎஸ் நோய்க்கு 2-வது பலி: 127 உயர்ந்த பாதிப்பு!

மகாராஷ்டிர மாநிலத்தில் ஜிபிஎஸ் நோய்க்கு இரண்டாவது நபர் பலியாகியுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. புணேவில் சமீபத்தில் ஜிபிஎஸ் என அழைக்கப்படும் கிலான் பாரே சிண்ட்ரோம் நோய்த் தொற... மேலும் பார்க்க

கேரளம்: 2 வயது சிறுவன் கிணற்றில் சடலமாக மீட்பு!

கேரளத்தின் திருவனந்தபுரத்தில் இரண்டு வயது சிறுவனின் சடலம் கிணற்றில் மிதந்ததையடுத்து, போலீஸார் உடலைக் கைப்பற்றினர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரத்தின் பலராமபுரத... மேலும் பார்க்க