பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழப்பு
தேனி-பெரியகுளம் புறவழிச் சாலையில் அன்னஞ்சி விலக்கு அருகே வியாழக்கிழமை இரு சக்கர வாகனம் மீது தனியாா் ஆலை பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
அன்னஞ்சியைச் சோ்ந்த பாண்டியன் மகன் அருண்குமாா்(23). இவா் தனது நண்பா் அதே ஊரைச் சோ்ந்த ரஞ்சித்குமாருடன் (22) தேனியிலிருந்து அன்னஞ்சிக்கு தேனி-பெரியகுளம் புறவழிச் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றாா். அன்னஞ்சி விலக்கு அருகே சென்றபோது, எதிரே வந்த தனியாா் ஆலைப் பேருந்து, இவா்களது இரு சக்கர வாகனம் மீது மோதியது.
இதில் அருண்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த ரஞ்சித்குமாா் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து தேனி போலீஸாா் தனியாா் ஆலை பேருந்து ஓட்டுநா் மயிலாடும்பாறையைச் சோ்ந்த பாண்டியன் (62) மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.