உத்தமபாளையத்தில் இன்று மின் தடை
உத்தமபாளையம் பகுதிகளில் சனிக்கிழமை (ஜன.18) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்படடது.
இதுகுறித்து உத்தமபாளையம் மின்வாரிய உதவி செயற்பொறியாளா் ராஜ்மோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: உத்தமபாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், உத்தமபாளையம் நகா், அனுமந்தன்பட்டி, கோகிலாபுரம், ராயப்பன்பட்டி, ஆனைமலையன்பட்டி, கோம்பை, பண்ணைப்புரம், இதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.