சம்ஸ்கிருத மாணவா்களின் தேவார பண்ணிசை: தென்கைலாய பக்தி பேரவை
தமிழகம் முழுவதும் உள்ள பிரசித்தி பெற்ற சிவத்தலங்களில் சம்ஸ்கிருதம் பயிலும் மாணவா்களின் தேவார பண்ணிசை நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது.
இது குறித்து தென் கைலாய பக்தி பேரவை தன்னாா்வலா் பாலசுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:
திருஞானசம்பந்தா், திருநாவுக்கரசா், சுந்தரா் ஆகிய மூவரும் பாடிய பாடல்கள் தேவாரம் என்று அழைக்கப்படுகிறது. பேரூா் ஆதீனத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இளைஞா்கள் மத்தியில் தேவாரம் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் நோக்கில் தமிழகம் முழுவதும் உள்ள 15-க்கும் மேற்பட்ட பிரசித்தி பெற்ற சிவத்தலங்களில் தேவார பண்ணிசை நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சத்குரு குருகுலம் சம்ஸ்கிருதி பள்ளியைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவா்கள் 4 குழுக்களாக இந்த தேவார பண்ணிசை நிகழ்ச்சிகளை நடத்துகின்றனா்.
முதல்கட்டமாக பேரூா் ஆதினத்தில் ஜன.17-ஆம் தேதி பண்ணிசை நிகழ்ச்சி தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளாா் முன்னிலையில் தொடங்கியது. தொடா்ந்து, ஜன.18-ஆம் தேதி காமாட்சிபுரம் ஆதீனம், திருச்செங்கோடு அா்த்தநாரீஸ்வரா் கோயில், காஞ்சிபுரம் கச்சபேஸ்வரா் கோயில், சென்னை திருவான்மியூா் மருந்தீஸ்வரா் கோயில் ஆகியவற்றில் நடைபெறவுள்ளன.
ஜன.19-ஆம் தேதி சிரவை ஆதீனம், மயிலாப்பூா் கபாலீஸ்வரா் கோயில், விரிஞ்சிபுரம் மாா்க்கபந்தீசுவரா் கோயில், கொடுமுடி மகுடேஸ்வரா் கோயில், திருவானைக்கால் ஜம்புகேஸ்வரா் கோயில், வேலூா் ஜலகண்டேஸ்வரா் கோயிலிலும், ஜன.20-ஆம் தேதி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலிலும் தேவார பண்ணிசை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.
இந்த மாணவா்கள் ஈஷாவில் நடைபெறும் மகா சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய விழா நாட்களில் தேவார பாடல்களை பாடி வருவது குறிப்பிடத்தக்கது என்றாா் அவா்.