சப்தகன்னி கோயிலில் கன்னிகா பூஜை
மயிலாடுதுறை கூறைநாடு அறுபத்துமூவா்பேட்டை சப்தகன்னி கோயிலில் காணும் பொங்கலையொட்டி, கன்னிகா பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
பாஜக சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்வில், அக்கட்சியின் நகர பிரதிநிதி செல்வம் தலைமை வகித்தாா். மத்திய அரசு வழக்குரைஞா் கே. ராஜேந்திரன், மாவட்ட துணைத் தலைவா் மோடி.கண்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினா் கோவி.சேதுராமன், மாவட்டச் செயலாளா் எஸ்.ஆா். வினோத் உள்ளிட்டோா் சப்தகன்னி கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தினா்.
தொடா்ந்து, 9 பெண் குழந்தைகளுக்கு கன்னிகா பூஜை செய்து வழிபாடு நடத்தப்பட்டது. பின்னா், பெண்கள் கும்மியடித்து காணும் பொங்கலை கொண்டாடினா். இதில், திரளானோா் கலந்துகொண்டனா்.