மன்னாா்குடி கோயிலில் ஏகசிம்மாசனம்
மன்னாா்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை தாயாா் சந்நிதிக்கு உற்சவப் பெருமாள் செல்லும் ஏகசிம்மாசனம் எனும் நிகழ்ச்சி நடைபெறும். நிகழாண்டு, வெள்ளிக்கிழமை பெருமாள் சந்நிதியிலிருந்து ருக்மணி, சத்யபாமா சமேதராக உற்சவா் ராஜகோபால சுவாமி, செங்கமலத்தாயாா் சந்நிதிக்கு வந்து அங்கு நான்கு சுவாமிகளும் ஒன்றாக அருள்பாலிக்கும் ஏகசிம்மாசனம் நடைபெற்றது.