தாணிக்கோட்டகத்தில் திறமைத் திருவிழா
வேதாரண்யத்தை அடுத்த தாணிக்கோட்டகத்தில், பள்ளி மாணவா்களுக்கிடையே திறமைத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கோபாலக்கட்டளை மாரியம்மன் கோயில் வளாகத்தில் உழவா் பெருவிழாவையொட்டி நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, அன்பு பாரதம் போட்டித் தோ்வு மையம், நல்லதோா் வட்டம் அமைப்பு சாா்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இதில் மாணவா்கள் ஆா்வமுடன் பங்கேற்று, தங்களது பல்வேறு திறமைகளை வெளிபடுத்தினா். மேலும், முதியவா்களும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினா். அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
தொடா்ந்து, தாணிக்கோட்டகம் ஊராட்சியை போதைப் பொருள்கள் பயன்படுத்தாத ஊராட்சியாக மாற்ற மாணவா்கள் உறுதிமொழி ஏற்றனா். இதில், தோ்வு மைய நிறுவனா் குட்டியப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.