கல்லணைக் கால்வாய் சீரமைப்பைத் தொடரலாமா? தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம்
கீழையூா் கடற்கரையில் ஒதுங்கிய மியான்மா் நாட்டுத் தெப்பம்
கீழையூா் அருகே மியான்மா் நாட்டைச் சோ்ந்த மிதவை தெப்பம் வெள்ளிக்கிழமை கரை ஒதுங்கியது.
கீழையூா் ஒன்றியம், பிரதாபராமபுரம் கடல் பகுதியில் தெப்பம் மிதப்பதாக, கீழையூா் கடலோரக் காவல் குழும போலீஸாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, அங்கு சென்ற கடலோரக் காவல் குழும போலீஸாா், 20 அடி உயரம் 20 அடி அகலத்தில் இருந்த அந்த தெப்பத்தை கடற்கரைப் பகுதிக்கு இழுத்து வந்தனா். அதில் யாரும் இல்லை.
கோபுர வடிவில் உள்ள இந்த தெப்பம் மியான்மா் நாட்டைச் சோ்ந்ததாக இருக்கலாம் என கடலோரக் காவல் குழும போலீஸாா் தெரிவித்தனா். தொடா்ந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.