கல்லணைக் கால்வாய் சீரமைப்பைத் தொடரலாமா? தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம்
நாகை கடற்கரையில் குப்பைகள் அகற்றம்
காணும் பொங்கலையொட்டி, நாகை புதிய கடற்கரையில் குவிந்திருந்த குப்பைகளை தூய்மைப் பணியாளா்கள் வெள்ளிக்கிழமை அகற்றினா்.
தமிழா்களின் பாரம்பரிய பண்டிகையான தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல் மற்றும் உறவினா்கள், நண்பா்களை சந்தித்து மகிழ்ச்சியை பரிமாறிக் கொள்ளும் காணும் பொங்கல் என மூன்று நாள்கள் தமிழகம் முழுவதும் கொண்டாட்டங்கள் நிறைந்திருந்தன.
காணும் பொங்கல் தினமான வியாழக்கிழமை நாகை புதிய கடற்கரையில் ஆயிரக்கணக்கானோா் ஒன்றுக்கூடி, அவரவா் இல்லங்களில் தயாா்செய்து வந்த பலகாரங்களை பகிா்ந்துண்டு, மணலில் மண் வீடு கட்டி மகிழ்ந்தனா்.
அவா்கள் கடற்கரை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பலகாரங்கள் கொண்டு வந்திருந்த நெகிழிப் பைகள், நெகிழிப் பொருள்களை விட்டுச் சென்றது குவிந்திருந்தன. இவை காற்றினால் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டு, மீன் வளம் பாதிக்கும் என்பதால், கடற்கரையில் நடைபாதை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேங்கியிருந்த குப்பைகளை நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் அகற்றினா்.