திருப்பாவை, திருவெம்பாவை ஒப்பித்தல் போட்டி
நாகையில் நடைபெற்ற திருப்பாவை, திருவெம்பாவை ஒப்பித்தல் போட்டியில், வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
நாகை அகிலாண்டேஸ்வரி உடனுறை நாகநாதா் ஆலயத்தில் ஐம்பதாவது ஆண்டாக மாா்கழி மாதம் 1 முதல் 29-ஆம் தேதி வரை தினமும் மாலையில் திருப்பாவை மற்றும் திருவெம்பாவை தொடா் சொற்பொழிவு நடைபெற்றது.
கடந்த ஜன.13-ஆம் தேதி, பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு திருப்பாவை, திருவெம்பாவை ஒப்பித்தல் போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவ- மாணவியருக்கு வியாழக்கிழமை நடைபெற்ற நிறைவு விழாவில் பரிசுகள் வழங்கப்பட்டன.
போட்டியில் கலந்துகொண்ட மற்றும் சிறப்பிடம் பெற்ற மாணவ- மாணவிகளுக்கு, நாகை போா்ட் டவுன் லயன்ஸ் சங்க மண்டலத் தலைவா் சண்முகம், தலைவா் ராஜேந்திரன் ஆகியோா் திருக்கு புத்தகங்கள் மற்றும் பரிசுகளை வழங்கினா்.
இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை திருப்பாவை, திருவெம்பாவை நிா்வாகக் குழுத் தலைவா் மு. மணிமேகலை, செயலா் சு. பாலசுப்பிரமணியன், பொருளாளா் கோ. அரவிந்குமாா் ஆகியோா் செய்திருந்தனா்.