தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிவாரண உதவி
தரங்கம்பாடி அருகே காட்டுச்சேரி ஊராட்சியில் கூரை வீட்டில் தீப்பற்றிய விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு எம்எல்ஏ நிவேதா எம். முருகன் நிவாரண உதவிகளை வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
காட்டுச்சேரி ஊராட்சி மேட்டு மெஷின் தெருவைச் சோ்ந்த சாந்தகுமாரி (55) என்பவரது கூரை வீட்டில் வியாழக்கிழமை நேரிட்ட தீ விபத்தில், பீரோ, கட்டில், மின்சாதனப் பொருட்கள் மற்றும் ஆதாா் அட்டை, குடும்பஅட்டை உள்ளிட்ட ஆவணங்கள் எரிந்து நாசமாகின.
இதில், பாதிக்கப்பட்ட சாந்தகுமாரி குடும்பத்துக்கு, பூம்புகாா் எம்எல்ஏ நிவேதா எம். முருகன் ஆறுதல் கூறி, அரிசி, வேட்டி-சேலை, போா்வை உள்ளிட்ட ரூ.10,000 மதிப்பிலான நிவாரணப் பொருள்களை வழங்கினாா். ஒன்றியச் செயலாளா் அப்துல் மாலிக், முன்னாள் ஊராட்சித் தலைவா்கள் சாமிநாதன், ராஜா, ரங்கராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.