செய்திகள் :

நான்கு ஆண்டுகளில் மதுரை மெட்ரோ ரயில் திட்டம்: மெட்ரோ ரயில் நிர்வாக இயக்கநர்

post image

மதுரை ரயில் நிலையம் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களை ஒருங்கிணைக்கவே சிறிய மாற்றங்கள் செய்யப்படுகிறது என மெட்ரோ ரயில் திட்ட நிர்வாக இயக்குநர் சித்திக் தெரிவித்துள்ளார்.

மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் முதல் கட்டமாக 11,368 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை 32 கி.மீ. தூரத்துக்கு வழித்தடம் அமைக்கப்பட இருக்கிறது.

இந்த நிலையில், மதுரை ரயில் நிலையத்திற்கு அருகே வரும் சுரங்க மெட்ரோ ரயில் நிலையத்துக்கான இருப்பிடத்தை தேர்வு செய்வது, இரு ரயில் நிலையங்களை ஒருங்கிணைப்பத்து குறித்த ஆய்வை சென்னை மெட்ரோ ரயில் திட்ட நிர்வாக இயக்குநர் சித்திக் மற்றும் திட்டப்பணிகள் இயக்குநர் அர்ச்சுனன் உள்ளிட்ட அதிகாரிகள் இன்று இடத்தை ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து, சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குனர் சித்திக் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, மதுரை மாநகருக்கு மெட்ரோ ரயில் திட்டம் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு மத்திய அரசிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில் மதுரை ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிற நிலையில், மெட்ரோ ரயில் நிலையமும் இங்கு வர இருக்கிறது என்றார்.

எனவே, இரண்டு நிலையத்தையும் ஒருங்கிணைத்து அமைக்க ரயில்வே நிர்வாக முதன்மை துணை பொறியாளர் மற்றும் மெட்ரோ திட்ட இயக்குனருடன் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்.

இந்த இரண்டு ரயில் நிலையங்களுக்கு இடையே குறுகிய இடைவெளியில் பொதுமக்கள் ஒரு (மெட்ரோ to தென்னக ரயில்வே) நிலையத்திலிருந்து மற்றொரு நிலையத்திற்கு சுலபமாக சென்று வர ஏதுவாக அமைப்பது குறித்து ஆய்வு நடத்தப்படுகிறது.

மெட்ரோ ரயில் திட்ட விரிவாக்க அறிக்கையை சமர்ப்பிக்கும் போது மதுரை ரயில் நிலைய மறுசீரமைப்பு குறித்த அறிக்கை முழுமையாக இல்லை, தற்போது இரண்டு திட்டங்களும் சிறு மாற்றங்கள் செய்து ஒருங்கிணைக்க ஏதுவாக திட்டமிடப்பட உள்ளது.

மத்திய அரசு ஒப்புதல் அளித்த சில மாதங்களில் கட்டுமான பணிகள் துவங்கப்படும். பணிகள் தொடங்கி ரயில் சேவை நான்கு வருடங்களில் நிறைவடையும்.

மதுரை மற்றும் கோவையில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் எந்தவித மாற்றமும் இல்லை. மதுரை ரயில் நிலையம் மற்றும் மெட்ரோ ரயில் நிலைய ஒருங்கிணைக்கவே சிறிய மாற்றங்கள் மட்டுமே செய்யப்படுகிறது.

மெட்ரோ ரயில் திட்டம் அமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்குவது குறித்தான ஆய்வு தற்போது நடத்தி வருகிறோம்.

மெட்ரோ ரயில் திட்டம் இரண்டு வகையாக நடத்தப்பட இருக்கிறது. உயர்நிலை பாலம் கொண்ட வழித்தடம் அமைக்க 2 வருடங்களும், சுரங்கப்பாதை வழித்தடம் அமைக்க 3 வருடங்கள் ஆகலாம், மொத்தமாக மதுரை மெட்ரோ ரயில் திட்டம் 4 ஆண்டுகள் திட்டமிடப்பட்டுள்ளது என கூறினார்.

பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல்

பொங்கல் விடுமுறை முடிந்து அதிகளவில் சென்னை திரும்பி வரும் மக்களால் பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.பொங்கலுக்கு 6 நாள்கள் தொடா் விடுமுறை விடப்பட்டதால், சென்னையில் இருந்து ஏராள... மேலும் பார்க்க

சென்னை சங்கமம் நிறைவு நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்!

சென்னையில் நடத்தப்பட்ட சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சி முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார். கடந்த 13ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த சென்னை சங்கமம் விழா வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தது. இந்... மேலும் பார்க்க

நடுவானில் இயந்திரக் கோளாறு- விமானம் தரையிறக்கம்

நடுவானில் இயந்திரக் கோளாறு காரணமாக புறப்பட்ட சில நிமிடங்களில் இண்டிகோ விமானம் மீண்டும் சென்னையிலேயே தரையிறக்கப்பட்டது. 165 பயணிகளுடன் அசாம் மாநிலம், குவகாத்திக்கு வெள்ளிக்கிழமை புறப்பட்ட இண்டிகோ விமான... மேலும் பார்க்க

பொங்கல்: அரசு பேருந்துகளில் 8.73 லட்சம் பேர் பயணம்

பொங்கலையொட்டி அரசுப் பேருந்துகளில் 8.73 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. ஜன.10 முதல் 13 வரையிலான 4 நாள்களில் இயக்கப்பட்ட 15,866 பேருந்துகளில் 8.73 லட்சம் பேர் பயணித... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வேட்புமனுத் தாக்கல் நிறைவு

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தது. இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை 65 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகும... மேலும் பார்க்க

சென்னை கார் பந்தயம்- தமிழ்நாடு அரசுக்கு அஜித் குமார் பாராட்டு

சென்னை கார் பந்தயம் நடத்திய தமிழ்நாடு அரசுக்கு அஜித் குமார் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியொன்றில், சென்னையில் முதல்முறையாக ஸ்ட்ரீட் ரேசிங் நடைபெற்றது. அதுவும் இரவுநேர ப... மேலும் பார்க்க