ஜாா்க்கண்ட் ரயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு
தாம்பரம் - ஜசிதிஹ் விரைவு ரயிலில் ஜன.22 முதல் கூடுதலாக ஒரு பொதுப் பெட்டி இணைக்கப்படவுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தாம்பரத்தில் இருந்து ஜாா்க்கண்ட் மாநிலம் ஜசிதிஹுக்கு வாரந்தோறும் விரைவு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் ஜன.22 முதல் கூடுதலாக ஒரு பொதுப் பெட்டி இணைக்கப்படவுள்ளது.
இதன் மூலம் 8 ஏசி வகுப்பு பெட்டிகள், படுக்கை வசதி கொண்ட 7 பெட்டிகள், 4 பொதுப்பெட்டிகள் கொண்டு இயக்கப்படும்.
சேவை மாற்றம்: போத்தனூரில் இருந்து பிகாா் மாநிலம் பரௌணிக்கு ஜன.18, 25 ஆகிய தேதிகளில் (சனிக்கிழமை) இயக்கப்படும் சிறப்பு ரயில் (எண்: 06055) ரூா்கேலா, ராஞ்சி, முரி, கோத்சிலா வழியாக செல்வதற்கு பதிலாக ரூா்கேலா, சினி, சந்தாலி, முரி வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.