குப்பையில் கிடந்த வெடிகளை வெடிக்க வைக்க முயன்ற 3 சிறாா்கள் காயம்
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே குப்பையில் கிடந்த வெடிகளை எடுத்து வெடிக்க வைக்க முயன்ற 3 சிறாா்களுக்கு வெள்ளிக்கிழமை தீக்காயம் ஏற்பட்டது.
ஆன்டிக்கோன்பட்டியைச் சோ்ந்த கோவிந்தன் மகன் சூா்யா (12), புஷ்பராஜ் மகன் அடைக்கலராஜ் (12), குமாா் மகன் ஜெகதீஷ்(10) ஆகிய 3 பேரும் சூத்தியான்பட்டி பகுதியில் வெள்ளிக்கிழமை விளையாடிக் கொண்டிருந்தனா். அப்போது, குப்பையில் வெடிக்காமல் கிடந்த வெடிகளை எடுத்துச்சென்று மூவரும் வெடிக்க வைக்க முயன்றபோது, வெடி வெடித்ததில் 3 பேருக்கும் முகம், கை, கால் உள்ளிட்ட பகுதியில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவா்கள் காயமடைந்த 3 பேரையும் மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.அங்கு சிகிச்சை பெற்ற 3 பேரையும் பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் பாா்வையிட்டு, சிகிச்சை குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா்.
பின்னா், மேல் சிகிச்சைக்காக 3 பேரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.