பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல்
பொங்கல் விடுமுறை முடிந்து அதிகளவில் சென்னை திரும்பி வரும் மக்களால் பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
பொங்கலுக்கு 6 நாள்கள் தொடா் விடுமுறை விடப்பட்டதால், சென்னையில் இருந்து ஏராளமானோர் பேருந்துகள், ரயில்கள் மூலமாக சொந்த ஊா்களுக்கு சென்றனா்.
தற்போது பொங்கல் பண்டிகை முடிந்த நிலையில் மக்கள் மீண்டும் சென்னையை நோக்கி திரும்பி வருகின்றனர்.
இதனால் சென்னையில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பெருங்களத்தூர் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
ஹமாஸுடன் போர் நிறுத்தம்: இஸ்ரேல் ஒப்புதல்
தாம்பரம், வண்டலூர் பகுதிகளில் ஊர்ந்தபடியே வாகனங்கள் நகர்ந்து வருகின்றன. போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் வாகனங்களும் சிக்கித் தவித்து வருகின்றன.
இதனிடையே சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காக, மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கபட உள்ளதாக மாநகர் போக்குவரத்துக் கழக வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
முன்னதாக சென்னையிலிருந்து சுமார் 8.73 லட்சம் பேர் அரசு பேருந்துகளில் சொந்த ஊருக்கு சென்றதாக போக்குவரத்துக் கழகம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.