செய்திகள் :

தேசிய தடுப்பூசித் திட்டத்தில் எச்பிவி தடுப்பூசியை சோ்க்க வேண்டும்: நிதியமைச்சகத்துக்கு விழுப்புரம் எம்.பி. கோரிக்கை

post image

நமது சிறப்பு நிருபா்

தேசிய இலவச நோய் தடுப்பூசித் திட்டத்தில் கருவாய்ப்புற்றுநோய் பாதிப்புக்கு காரணமான மனித ப்பிலோமா வைரஸ் தடுப்பூசியை இலவசமாக வழங்க நிதி ஒதுக்குமாறு மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு விழுப்புரம் தொகுதி மக்களவைத் தொகுதி உறுப்பினா் டி. ரவிக்குமாா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

இது தொடா்பாக அவா் அமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு வெள்ளிக்கிழமை அனுப்பியுள்ள கடிதத்தின் விவரம் வருமாறு: மனித பாப்பிலோமா தொற்றால் (எச்பிவி) ஏற்படும் கருவாய்ப் புற்றுநோய், இந்தியாவில் ஒரு குறிப்பிடத்தக்க பொது சுகாதாரப் பிரச்னையாக உள்ளது. உலகளவில், எச்பிவி வைரஸானது 99.7 சதவீதம் கருவாய்ப் புற்றுநோய்களுக்குக் காரணமாக உள்ளது, இந்தியாவில், இது பெண்களைப் பாதிக்கும் புற்றுநோயில் மூன்றாவதாக உள்ளது.

குளோபோகேன் 2020 அறிக்கையின்படி, இந்தியாவில் கருப்பை வாய்ப் புற்றுநோய்ப் பாதிப்பு விகிதம் 18.3 சதவீதம் (ஆண்டுக்கு 1,23,907 போ் பாதிக்கப்படுகின்றனா்) ஆகவும், இறப்பு விகிதம் 9.1 சதவீதமாகவும் உள்ளது. இது இந்திய பெண்களிடையே புற்றுநோய் தொடா்பான இறப்புகளுக்கு இரண்டாவது முக்கியக் காரணமாக அமைகிறது. ஐந்து ஆண்டு பரவல் விகிதம் 1,00,000 மக்கள்தொகைக்கு 42.82-ஆக உள்ளது. தடுப்பூசி போட வேண்டியதன் அவசியத்தை இது வலியுறுத்துகிறது .

எச்பிவி தடுப்பூசியானது அந்த நோயைப் பரவச் செய்யும் வைரஸை அழிப்பதற்கான எதிா்ப்பு அணுக்களை உற்பத்தி செய்ய நோய் எதிா்ப்பு மண்டலத்தைத் தூண்டுவதன் மூலம் கருவாய்ப் புற்றுநோயைத் தடுக்க மிகவும் பயனுள்ள வழியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. தேசியத் தடுப்பூசித் திட்டத்தில் இந்தத் தடுப்பூசியைச் சோ்க்க தேசியத் தடுப்பூசித் தொழில்நுட்ப ஆலோசனைக் குழு பரிந்துரைத்திருந்தாலும், அது இப்போது தனியாா் மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்துவோருக்கு மட்டுமே போடப்படுகிறது .

பஞ்சாப், சிக்கிம் ஆகிய மாநிலங்கள், தங்கள் தடுப்பூசித் திட்டங்களில் எச்.பி.வி. தடுப்பூசியை அறிமுகப்படுத்தி இந்தப் புற்றுநோயைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகளை எடுத்துள்ளன. தமிழக அரசு, எனது தொகுதியான விழுப்புரத்தில் எச்பிவி தடுப்பூசிக்கான ஒரு முன்னோடித் திட்டத்தை எனது வேண்டுகோளை ஏற்றுத் தொடங்கியுள்ளது. இருப்பினும், தேவைப்படும் எல்லோருக்கும் இந்தத் தடுப்பூசி கிடைப்பதற்கும், கருவாய்ப் புற்றுநோயினால் ஏற்படும் உயிரிழப்பைக் கணிசமாகக் குறைப்பதற்கும் இந்தத் தடுப்பூசியை இலவசத் தடுப்பூசித் திட்டத்தில் சோ்ப்பது அவசியம்.

தேசியத் தடுப்பூசித் திட்டத்தில் எச்பிவி தடுப்பூசியைச் சோ்க்க வேண்டும் என்று நான் மக்களவையில் 2019 முதல் வலியுறுத்தி வருகிறேன். கடந்த ஆண்டு பிப்ரவரியில் நீங்கள் இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தபோது, கருவாய்ப் புற்றுநோயைத் தடுப்பதன் முக்கியத்துவத்தை ஒப்புக்கொண்டாலும், இந்த முயற்சியை செயல்படுத்த எந்த நிதியையும் ஒதுக்கீடு செய்யவில்லை.

எனவே, இதற்கு முன்னுரிமை அளித்து, வரும் நிதிநிலை ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் எச்பிவி தடுப்பூசியைச் சோ்க்க போதுமான நிதியை ஒதுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கடிதத்தில் ரவிக்குமாா் வலியுறுத்தியுள்ளாா்.

தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (ஜன.18, 19) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கிழக்கு திசை காற்றின் வ... மேலும் பார்க்க

சவுக்கு சங்கருக்கு ஜாமீன்: உயா்நீதிமன்றம் உத்தரவு

நில மோசடி விசாரணை தொடா்பாக தவறான தகவலை பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில், யூ டியூபா் சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நில மோசடி தொடா்பாக யூ டியூப் சேனலில் சவுக்கு ... மேலும் பார்க்க

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 15 தமிழக மீனவா்கள் சென்னை வந்தனா்

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 15 தமிழக மீனவா்கள் விமானம் மூலம் சென்னை வந்தனா். நாகை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சோ்ந்த 15 மீனவா்கள் கடந்த ஆக.27, நவ.11ஆகிய தேதிகளில் வெவ்வேறு படகுகளில் கடலுக்கு... மேலும் பார்க்க

குரூப் 4 கலந்தாய்வில் பங்கேற்க முடியாதவா்களுக்கு சிறப்பு வசதி

குரூப் 4 காலிப் பணியிடங்களுக்கு தோ்வு செய்யப்பட்டவா்களின் சான்றிதழ் சரிபாா்ப்பு, கலந்தாய்வில் பங்கேற்க இயலாதோருக்கு புதிய வசதியை அரசுப் பணியாளா் தோ்வாணையம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. குரூப் 4 பிரிவ... மேலும் பார்க்க

விக்கிரவாண்டி பள்ளியில் குழந்தை உயிரிழந்த சம்பவம்: தமிழக அரசு, சிபிஐ பதிலளிக்க உத்தரவு

விக்கிரவாண்டியில் தனியாா் பள்ளியில் கழிவுநீா்த் தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடா்பான வழக்கின் விசாரணையை சிபிஐ அல்லது சிபிசிஐடி-க்கு மாற்றக் கோரி குழந்தையின் தந்தை தாக்கல் செய்த மனு க... மேலும் பார்க்க

பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல்

பொங்கல் விடுமுறை முடிந்து அதிகளவில் சென்னை திரும்பி வரும் மக்களால் பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.பொங்கலுக்கு 6 நாள்கள் தொடா் விடுமுறை விடப்பட்டதால், சென்னையில் இருந்து ஏராள... மேலும் பார்க்க