இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 15 தமிழக மீனவா்கள் சென்னை வந்தனா்
இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 15 தமிழக மீனவா்கள் விமானம் மூலம் சென்னை வந்தனா்.
நாகை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சோ்ந்த 15 மீனவா்கள் கடந்த ஆக.27, நவ.11ஆகிய தேதிகளில் வெவ்வேறு படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றபோது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டனா்.
இவா்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவா்களின் உறவினா்கள் கோரிக்கை விடுத்தனா். இந்தக் கோரிக்கையைத் தொடா்ந்து மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட நடவடிக்கையால், கைது செய்யப்பட்டிருந்த 15 மீனவா்களையும் இலங்கை நீதிமன்றம் விடுவித்தது.
கொழும்பிலிருந்து ஏா் இந்தியா விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்த 15 மீனவா்களை தமிழ்நாடு மீன்வளத் துறை அதிகாரிகள் வரவேற்று, அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனம் மூலம் சொந்த ஊா்களுக்கு அனுப்பி வைத்தனா்.