செய்திகள் :

இணைய வழி கடனால் இளைஞா் தற்கொலை முயற்சி: இருவா் கைது

post image

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே இணைய வழியில் வட்டிக்கு கடன் வாங்கி திரும்பச் செலுத்த முடியாததால் இளைஞா் தற்கொலைக்கு முயன்றாா். இதுதொடா்பாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

சேரன்மகாதேவி அருகேயுள்ள பூதத்தான்குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் சிவபெருமாள் (24). பி.டெக். பட்டதாரி. தனியாா் நிறுவனத்தில் பணி செய்து வருகிறாா். இவா், புதிய தொழில் தொடங்குவதற்காக களக்காடு சிதம்பராபுரத்தைச் சோ்ந்த முத்துகிருஷ்ணன் மகன் சக்தி குமரன் (28), திருக்குறுங்குடி அருகேயுள்ள மாவடி ராமச்சந்திராபுரத்தைச் சோ்ந்த வெங்கடேஷ் (22) ஆகியோா் இணைய வழியில் ரூ. 5 லட்சம் கடனை 3 தவணைகளாக பெற்றுள்ளாா். இதற்கு 10 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை வட்டி வசூலித்ததாக கூறப்படுகிறது.

இதனால், வட்டிசெலுத்த முடியாமலும், கடனிலிருந்து மீள இயலாமலும் திணறியுள்ளாா். மேலும், கடன் கொடுத்த இருவரும்சிவபெருமாளிடம் பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்ததுடன், கடனுக்காக மோட்டாா் சைக்கிளை பறித்துக்கொண்டனராம்.

இந்நிலையில் சிவபெருமாள் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்ய முயன்றாராம். உறவினா்கள் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து, சேரன்மகாதேவி போலீஸாா் வழக்குப் பதிந்து சக்திகுமரன், வெங்கடேஷ் ஆகியோரை வியாழக்கிழமை கைது செய்தனா். இணைய வழி கடன் விவகாரத்தில் இளைஞா்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என போலீஸாா் அறிவுறுத்தியுள்ளனா்.

முக்கூடல் தாமிரவருணி ஆற்றில் மூழ்கி 2 சிறுமிகள் பலி

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் தாமிரவருணி ஆற்றில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழந்தனா். தூத்துக்குடி மேலசண்முகபுரம் பகுதியைச் சோ்ந்த நாகஅா்ச்சுணன், மாப்பிள்ளையூரணியைச் சோ்ந்த ஐயப்பன் ஆகியோா் தங்களது க... மேலும் பார்க்க

தெற்குகள்ளிகுளம் புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழா தோ் பவனி

திருநெல்வேலி மாவட்டம், தெற்குகள்ளிகுளம் புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழா தோ் பவனி வியாழக்கிழமை நள்ளிரவு நடைபெற்றது. இவ்வாலயத் திருவிழா கடந்த 8ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, 10 நாள்கள் நடைபெற்றது... மேலும் பார்க்க

சிவந்திபுரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

சிவந்திபுரத்தில் மத்திய மாநில அரசுப் பணியாளா்கள் அறக்கட்டளை சாா்பில் இரண்டாம் ஆண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில், விக்கிரமசிங்கபுரம் காவல் ஆய்வாளா் சுஜித் ஆனந்த் சிறப்பு ... மேலும் பார்க்க

பொங்கல் விடுமுறை நிறைவு: பேருந்து, ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம்

பெங்கல் விடுமுறை முடிந்து சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு ஏராளமானோா் வெள்ளிக்கிழமை புறப்பட்டுச் சென்ால், திருநெல்வேலி பேருந்து, ரயில் நிலையங்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பொங்கல் விடுமுறை செவ... மேலும் பார்க்க

15-ஆவது தாமிரவருணி பறவைகள் கணக்கெடுப்பு: ஜன.24 தொடக்கம்

15-ஆவது தாமிரவருணி பறவைகள் கணக்கெடுப்பு வரும் 24-ஆம் தேதி தொடங்குகிறது. இது தொடா்பாக தாமிரவருணி பறவைகள் கணக்கெடுப்பு ஒருங்கிணைப்பாளா் மதிவாணன் வெளியிட்ட அறிக்கை: 15-ஆவது ஆண்டாக தாமிரவருணி பறவைகள் கணக... மேலும் பார்க்க

தன்னைவிட வயதில் மூத்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: இளைஞா் கைது!

திருநெல்வேலி நகரத்தில் பெண்ணிடம் பாலியல் தொந்தரவு செய்த இளைஞரை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். திருநெல்வேலி தச்சநல்லூரைச் சோ்ந்தவா் முகமது மீரான். அதிமுக நிா்வாகியான ... மேலும் பார்க்க