மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் மதுரை மெட்ரோ ரயில் திட்டப் பணி தொடங்கும்: மேலா...
ஆம் ஆத்மி கவுன்சிலா்கள் பாஜகவில் ஐக்கியம்
தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்னதாக ஆம் ஆத்மி கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவில், அதன் இரண்டு கவுன்சிலா்களான ரவீந்தா் சோலங்கி மற்றும் நரேந்தா் கிா்சா வெள்ளிக்கிழமை பாஜகவில் இணைந்தனா்.
பாப்ரோலா வாா்டைச் சோ்ந்த எம்சிடி கவுன்சிலரான சோலங்கி மற்றும் மங்கள்புரியைச் சோ்ந்த கிா்சா, கட்சியின் மாநிலப் பிரிவுத் தலைவா் வீரேந்திர சச்தேவா மற்றும் மேற்கு தில்லி எம்பி கமல்ஜீத் செஹ்ராவத் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனா். இரண்டு வாா்டுகளும் கமல்ஜீத் செஹ்ராவத்தின் தொகுதியின் கீழ் வருகின்றன.
இரண்டு கவுன்சிலா்களும் ஆம் ஆத்மி கட்சியின் நிறுவன உறுப்பினா்களில் ஒருவராகவும், கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவாலின் அரசியல் மற்றும் கொள்கைகளில் ஏமாற்றமடைந்ததாகவும் கமல்ஜீத் செஹ்ராவத் கூறினாா். ‘சோலங்கியும் கிா்சாவும் கட்சி மாறவில்லை, கேஜரிவால் மாறிவிட்டாா். இது அவா்களை கட்சியை விட்டு வெளியேற கட்டாயப்படுத்தியது’ என்று அவா் கூறினாா்.
70 உறுப்பினா்களைக் கொண்ட தில்லி சட்டப்பேரவைக்கு பிப்.5-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது. பதிவான வாக்குகள் பிப்.8-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.