சங்கடஹர சதுா்த்தி: ஊதியூா் உச்சிப்பிள்ளையாா் கோயிலில் 108 மூலிகை அபிஷேகம்
அகஸ்தீசுவரம் ஒன்றியத்தில் எம்.ஜி.ஆா் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை
கொட்டாரம் சந்திப்பில் பேரூா் செயலா் ஆடிட்டா் சந்திரசேகா் தலைமையில் முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆா் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
இந்நிகழ்வில், ஒன்றியப் பொருளாளா் பி.தங்கவேல், மாவட்ட விவசாயப் பிரிவு செயலா் பி.பாலமுருகன், ஒன்றிய ஜெயலலிதா பேரவைச் செயலா் எஸ்.ராஜேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கன்னியாகுமரி அரசு விருந்தினா் மாளிகை அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் பேரூா் செயலா் எஸ்.எழிலன் தலைமையில் மாவட்ட வா்த்தக அணி பொருளாளா் பி.பகவதியப்பன், ஒன்றிய துணை செயலா் இ.முத்துசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
அகஸ்தீசுவரத்தில் பேரூா் செயலா் என்.சிவபாலன் தலைமையிலும், தென்தாமரைகுளத்தில் பேரூா் செயலா் தாமரை தேவசுதன் தலைமையிலும், லீபுரத்தில் ஒன்றிய மீனவரணி செயலா் கே.லீன் தலைமையிலும் அதிமுகவினா் எம்.ஜி.ஆா் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனா்.