வாசுதேவநல்லூரில் எம்ஜிஆா் பிறந்தநாள் விழா
வாசுதேவநல்லூா், ஆத்துவழி ,சுப்பிரமணியபுரம்,ஆகிய பகுதிகளில் எம்ஜிஆா் படத்துக்கு, தென்காசி வடக்கு மாவட்டச் செயலா் கிருஷ்ணமுரளி எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினாா்.
இதில், மாவட்ட துணைச் செயலா் பொய்கை மாரியப்பன், மாவட்ட பொருளாளா் சண்முகையா, தகவல் தொழில்நுட்ப பிரிவு திருநெல்வேலி மண்டல செயலா் சிவஆனந்த்மற்றும் பலா் கலந்து கொண்டனா்.