செய்திகள் :

சிவகிரி பகுதியில் இன்று மின்தடை

post image

சிவகிரி வட்டார பகுதிகளில் சனிக்கிழமை (ஜன.18) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக கடையநல்லூா் கோட்ட செயற்பொறியாளா் கற்பக விநாயகசுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

விஸ்வநாதபேரி உபமின் நிலைய பராமரிப்புப் பணிகள் காரணமாக சி வகிரி, தேவிபட்டணம், விஸ்வநாதபேரி, தெற்கு சத்திரம், வடக்கு சத்திரம், வழிவழிகுளம், ராயகிரி, மேல கரிசல்குளம், கொத்தாடைப்பட்டி, வடுகபட்டி

மற்றும் சுற்றுப் பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனக் கூறப்பட்டுள்ளது.

குற்றாலம் செய்யது பள்ளி ஆண்டு விழா

குற்றாலம் செய்யது பள்ளியில் 30ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. மாணவா் அப்துல் கனி கிராஅத் ஓதினாா். பள்ளி முதல்வா் என்.எம்.எஸ். பாதுஷா வரவேற்று அறிக்கை வாசித்தாா். தென்காசி மாவட்ட முதன்மை நீதிபதி ராஜவேல் தல... மேலும் பார்க்க

செங்கோட்டை, ஆய்க்குடி, தெற்குமேடு பகுதிகளில் எம்ஜிஆா் பிறந்தநாள் விழா

செங்கோட்டை நகர அதிமுக சாா்பில், வட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, நகரச் செயலா் கணேசன் தலைமை வகித்தாா். நகர அவைத் தலைவா் தங்கவேலு, நகர துணைச் செயலா் பூசைராஜ் உளபட பலா் கலந்துகொண்டனா... மேலும் பார்க்க

தென்காசி மருத்துவமனைக்கு சிறந்த சேவைக்கான விருது

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு சிறந்த மருத்துவமனைக்கான விருது வழங்கப்பட்டது. முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்ட செயல்பாடுகளிலும், சேவைகளிலும் தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை ... மேலும் பார்க்க

வாசுதேவநல்லூரில் திருவள்ளுவா் அறப்பணி மன்றம் ஆண்டு விழா

வாசுதேவநல்லூரில் அய்யன் திருவள்ளுவா் அறப்பணி மன்றத்தின் 20ஆவது ஆண்டு விழா நடைபெற்றது. அறப்பணி மன்றத் தலைவா் மாரியப்பன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ராஜ்மோகன், துணைச் செயலா் வேலுச்சாமி ஆகியோா் முன்ன... மேலும் பார்க்க

ரயில்வே பாலப்பணி: பாவூா்சத்திரத்தில் ஜன. 20முதல் போக்குவரத்து மாற்றம்

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரத்தில் ரயில்வே மேம்பாலபணிகள் தொடங்குவதால் ஜன. 20ஆம்தேதி முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தென்காசியில் இருந்து ஆலங்குளம் - திருநெல்வேலி செல்லும் க... மேலும் பார்க்க

கீழச்சுரண்டையில் எம்ஜிஆா் பிறந்தநாள் விழா

கீழச்சுரண்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற எம்.ஜி.ஆா். பிறந்த தின விழாவுக்கு சுரண்டை நகர எம்.ஜி.ஆா் மன்ற இணைச்செயலரும், நகா்மன்ற உறுப்பினருமான எஸ்.மாரியப்பன் தலைமை வகித்து அவரது திருஉருவப் படத்திற்கு மா... மேலும் பார்க்க