மேலஇலந்தைக்குளத்தில் எம்.ஜி.ஆா் பிறந்தநாள் விழா
சங்கரன்கோவில் அருகே மேலஇலந்தைக்குளத்தில் முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆா் 108 ஆவது பிறந்தநாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி அங்கு அலங்கரித்து வைக்கப்பட்ட அவரது உருவப் படத்துக்கு வடக்கு மாவட்ட ஜெ.பேரவை தலைவா் செந்தில்குமாா் உள்ளிட்ட அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செய்தனா். இதில் சிறுபான்மையினா் நலப்பிரிவு மாவட்ட இணைச்செயலா் அந்தோணிடேனியல்,அமைப்புசாரா ஓட்டுநா் துணை செயலா் மகாராஜாபாண்டியன், கிளை செயலா்கள் முருகன்,இம்மானுவேல், உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.