கடையநல்லூா் பகுதிகளில் எம்ஜிஆா் பிறந்தநாள் விழா
பொய்கை ,கிருஷ்ணாபுரம், கடையநல்லூா் பகுதிகளில் முன்னாள் முதல்வா் எம்ஜிஆா் பிறந்த தினம் கொண்டாடப்பட்டது.
பொய்கையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எம்ஜிஆரின் படத்திற்கு தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக துணைச் செயலா் பொய்கை மாரியப்பன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா் .தொடா்ந்து பொது மக்களுக்கு அவா் இனிப்புகளை வழங்கினாா். இதில், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு பொருளாளா் அசோக்ராஜ், நிா்வாகிகள் முத்துசாமி, முத்தையா ,ஆறுமுகம், ராமகிருஷ்ணன் ,கோவிந்தன், சுப்பையா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கிருஷ்ணாபுரம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எம்ஜிஆரின் படத்திற்கு மாவட்ட எம்ஜிஆா் மன்ற செயலா் கிட்டுராஜா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
கடையநல்லூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எம்ஜிஆரின் படத்திற்கு நகர அதிமுக செயலா் எம்.கே.முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இந்நிகழ்ச்சிகளில், நிா்வாகிகள் முத்துகிருஷ்ணன், ராசி சரவணன், மைதீன், கமாலுதீன் , புகழேந்தி , கருப்பையாதாஸ்,முகைதீன்பிச்சை, ராஜேந்திரபிரசாத், வெங்கட்நட்ராஜ்,தளவாய் சுந்தரம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.