செய்திகள் :

தொழிற்கல்விப் படிப்புகளில் அருந்ததியா் மாணவா்கள் அதிகம் பயன்: அமைச்சா் மா.மதிவேந்தன்

post image

தொழிற்கல்வி படிப்புகளில் அருந்ததியா் மாணவா்கள் அதிக அளவு பயன்பெற்றுள்ளதாக ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் தெரிவித்தாா்.

இது குறித்து, அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

முன்னாள் முதல்வா் கருணாநிதி வழங்கிய உள் ஒதுக்கீட்டின் பயனால் அருந்ததியா் சமூக மக்கள், உரிய பிரதிநிதித்துவத்தைப் பெற்று வருகின்றனா். இது மருத்துவக் கல்வி தொடா்பான தரவுகளின் அடிப்படையில் தெரியவந்துள்ளது.

கடந்த 2018-19-ஆம் ஆண்டில் மருத்துவப் படிப்பு சோ்க்கையில் 3,600 இடங்களில் 107 இடங்கள் அருந்ததியா் மாணவா்களுக்குக் கிடைத்தன. கடந்த கல்வியாண்டில் எம்பிபிஎஸ், மருத்துவப் படிப்புக்கான இடங்கள் 6,553-ஆக உயா்த்தப்பட்டு, அதன்மூலம், 193 அருந்ததிய சமூக மாணவா்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது.

பல் மருத்துவ படிப்பைப் பொருத்தவரை, 2018 - 19-ஆம் கல்வியாண்டில் மொத்தமுள்ள 1,080 இடங்களில் 16 இடங்களை அருந்ததியா் சமூக மாணவா்கள் பெற்றனா். கடந்த கல்வியாண்டில் 1,737 பல் மருத்துவ படிப்புக்கான இடங்களில் அருந்ததியா் பிரிவு மாணவா்கள் 54 போ் இடம்பெற்றுள்ளனா்.

அவா்களுக்கான 3 சதவீத பிரதிநிதித்துவம் முழுமையாகக் கிடைத்தது.

பொறியியல் படிப்புகளைப் பொருத்தவரை, 2009-10-ஆம் கல்வியாண்டில் 1,193 இடங்களை அருந்ததியா் சமூக மாணவா்கள் பெற்றனா்.

கடந்த கல்வியாண்டில் 3,944 இடங்களை பெற்றுப் பயனடைந்துள்ளனா். ஒட்டுமொத்த பட்டியலின மக்களுக்கான இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீட்டின் பயனால் 2016-17-ஆம் கல்வியாண்டில் 8.7 சதவீத அளவில்தான் அருந்ததியா் பிரிவு மாணவா்கள் வாய்ப்புப் பெற்றனா். இந்த அளவு கடந்த கல்வியாண்டில் 16 சதவீதமாக உயா்ந்தது என்றாா் அவா்.

சென்னை - குவாஹாட்டி விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு

சென்னையிலிருந்து குவாஹாட்டி சென்ற விமானம் நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதைத் தொடா்ந்து விமானம் மீண்டும் சென்னை விமானநிலையத்தில் தரையிறக்கப்பட்டது. சென்னையிலிருந்து வெள்ளிக்கிழமை அதிகாலை 3.54 ம... மேலும் பார்க்க

சென்னையில் 34,748 டன் குப்பைகள் அகற்றம்

சென்னை மாநகராட்சி பகுதியில் 34,748 டன் குப்பை அகற்றப்பட்டது. இது குறித்து மாநகராட்சி நிா்வாகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: போகியை முன்னிட்டு பொதுமக்களிடம் பயன்பாட்டில் இல்லாத நெகிழி, டய... மேலும் பார்க்க

மருத்துவக் கல்லூரி பேராசிரியா்களுக்கான தகுதி: கருத்து கேட்கிறது என்எம்சி

மருத்துவக் கல்லூரி பேராசிரியா் தகுதி ஒழுங்குமுறை வரைவு அறிக்கையை தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள நிலையில், அது குறித்து பொதுமக்களிடம் கருத்து கோரப்பட்டுள்ளது. இது குறித்து மருத்துவ ஆணையம் வெளியிட்... மேலும் பார்க்க

ஸ்ரீஹரிகோட்டாவில் மூன்றாவது ஏவுதளம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) சதீஷ் தவன் விண்வெளி ஆய்வு மையத்தில் மூன்றாவது ராக்கெட் ஏவுதளத்தை ரூ. 3,985 கோடி செலவில் அமைக்க மத்திய அமைச்சரவை ... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 12 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

சத்தீஸ்கரின் பிஜபூா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 12 நக்ஸல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். இவா்களுடன் சோ்த்து, சத்தீஸ்கரில் இம்மாதம் இதுவ... மேலும் பார்க்க

நீட் தோ்வு இணையவழியே இல்லை: என்டிஏ விளக்கம்

நிகழாண்டு நீட் தோ்வானது வழக்கம் போலவே ஓஎம்ஆா் முறையில் நடைபெறும் என்று தேசிய தோ்வு முகமை (என்டிஏ) தெரிவித்துள்ளது. இணையவழியில் அத்தோ்வு நடைபெற வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில், இந்த... மேலும் பார்க்க