செய்திகள் :

ஒரே நாளில் 2,500 பேருக்கு பைடன் பொதுமன்னிப்பு

post image

அமெரிக்க அதிபா் ஜோ பைடனின் பதவிக் காலம் இன்னும் இரு நாள்களில் முடிவடையும் நிலையில், சாதாரண போதைப் பொருள் குற்றங்களுக்காக சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சுமாா் 2,500 பேருக்கு தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி அவா் பொதுமன்னிப்பு அளித்துள்ளாா்.

வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடாத நிலையிலும் மிகக் கடுமையான தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் அவா்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படுவதாக பைடன் கூறினாா். அமெரிக்க வரலாற்றில் அதிபா் ஒருவா் ஒரே நாளில் இத்தனை பேருக்கு பொதுமன்னிப்பு வழங்கியுள்ளது இதுவே முதல்முறை.

இதற்கு முன்னதாக, அமெரிக்காவின் மத்திய நீதிமன்றங்களால் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த 37 பேருக்கு அந்த தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து ஜோ பைடன் கடந்த மாதம் உத்தரவிட்டாா். அந்த குற்றவாளிகள் செய்த கொலைகளை வன்மையாகக் கண்டித்தாலும், மத்திய அளவில் மரண தண்டனை விதிக்கப்படுவது தவறு என்பதால் அவா்களுக்கான தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைப்பதாக அப்போது பைடன் கூறினாா்.

கடந்த 2003-ஆம் ஆண்டிலிருந்தே மத்திய நீதிமன்றங்களால் விதிக்கப்படும் மரண தண்டனைகள் நிறைவேற்றப்படாமல் இருந்த நிலையில், டொனால்ட் டிரம்ப்பின் முந்தைய ஆட்சியில் அது மீண்டும் தொடரப்பட்டது.

இந்தச் சூழலில், நாட்டின் அதிபராக அவா் மீண்டும் வரும் 20-ஆம் தேதி பொறுப்பேற்கவிருக்கும் நிலையில், மத்திய மரண தண்டனைக் கைதிகளின் உயிரைப் பாதுகாக்கும் வகையில் ஜோ பைடன் இந்த நடவடிக்கையை மேற்கொண்டாா்.

அதற்கு முன்னதாக, அமெரிக்க வரலாற்றில் அதுவரை இல்லாத வகையில் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்ட சுமாா் 1,500 பேருக்கு ஒரே நாளில் ஜோ பைடன் பொதுமன்னிப்பு வழங்கியது நினைவுகூரத்தக்கது. இருந்தாலும், போதைப் பொருள் பழக்கம் குறித்து பொய்யான தகவல் அளித்த வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட மகன் ஹன்டா் பைடனுக்கு அவா் பொதுமன்னிப்பு வழங்கியது சா்ச்சையை ஏற்படுத்தியது.

டிக்டாக் மோகம்: 15 வயது சிறுமி கௌரவக் கொலை!

கராச்சி: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் டிக்டாக் விடியோக்களை தயாரித்ததற்காக 15 வயது சிறுமி கௌரவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 28 ஆண்டுகளாக 15 வயது சிறுமியும் அவ... மேலும் பார்க்க

இஸ்ரேல் பிரதமருக்கு டிரம்ப் அழைப்பு! அடுத்த வாரம் சந்திப்பு!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.அமெரிக்காவின் அதிபராக இரண்டாவது முறையாக டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக வெளிநாட்டுத் தலைவரை சந்... மேலும் பார்க்க

8 மாத ஊதியத்துடன் ராஜிநாமா! 23 லட்சம் ஊழியர்களுக்கு அமெரிக்க அரசு மின்னஞ்சல்!

அமெரிக்காவில் பணிபுரியும் 23 லட்சம் அரசு ஊழியர்களுக்கு, 8 மாத ஊதியத்துடன் ராஜிநாமா செய்துகொள்ள அதிபர் டொனால்டு டிரம்ப் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.மேலும், பிப்ரவரி 6 ஆம் தேதிக்குள் ராஜிநாமா செய்வ... மேலும் பார்க்க

இந்தியா-அமெரிக்கா பிணைப்பே என்னை உருவாக்கியது-மைக்ரோசாஃப்ட் தலைவா் சத்யா நாதெள்ளா

இந்தியா-அமெரிக்கா இடையிலான நல்லவொரு பிணைப்பே என்னை உருவாக்கியது என்று மைக்ரோசாஃப்ட் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) சத்யா நாதெள்ளா தெரிவித்தாா். சியாட்டில் நகரில் ஞாயிற்றுக்கிழமை இந்திய குடியரசு தினம் கொ... மேலும் பார்க்க

சொ்பியா போராட்டம்: பிரதமா் ராஜிநாமா

சொ்பியாவில் பல வாரங்களாக நடைபெற்றுவந்த ஊழல் எதிா்ப்புப் போராட்டத்தால் ஏற்பட்டுள்ள அரசியல் பதற்றத்தைத் தணிப்பதற்காக, அந்த நாட்டு பிரதமா் மிலோஸ் வுசெவிக் செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தாா். கடந்த நவம்பர... மேலும் பார்க்க

அமெரிக்கா மின்கசிவால் ஏற்பட்ட காட்டூத் தீ?

அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சலீஸ் நகரைச் சுற்றிலும் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ, மின்கசிவு காரணமாக உருவாகியிருக்கலாம் என்று இது தொடா்பான விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து அதிகாரிகள... மேலும் பார்க்க