அமெரிக்காவிலிருந்து 3-ஆம் கட்டமாக நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் தாயகம் திரும்பினர...
டிக்டாக் மோகம்: 15 வயது சிறுமி கௌரவக் கொலை!
கராச்சி: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் டிக்டாக் விடியோக்களை தயாரித்ததற்காக 15 வயது சிறுமி கௌரவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 28 ஆண்டுகளாக 15 வயது சிறுமியும் அவரது குடும்பமும் அமெரிக்காவில் வசித்து வந்தனர். அவரது முன்னோர்கள் வீடு பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ளது.
சிறுமி அமெரிக்காவில் பிறந்து வளர்ந்ததால், டிக்டாக் விடியோ போடுவதைப் பழக்கமாக வைத்திருந்தார். டிக்டாக்கில் விடியோக்களை உருவாக்குவதை நிறுத்துமாறு அவரது தந்தை கூறியுள்ளார். ஆனால் சிறுமி கேட்க மறுத்துவிட்டார்.
இதனால் மனமுடைந்த தந்தை, மகளைக் கொன்றுவிட வேண்டும் என்று முடிவுசெய்தார். கடந்த ஜனவரி 15 அன்று சிறுமியும் அவரது குடும்பத்தினரும் சொந்த ஊரான குவெட்டாவுக்கு வந்திருந்தனர். அப்போது, தந்தையும், மாமாவும் சேர்ந்து திட்டமிட்டு 15 வயது சிறுமியை கெளரவக் கொலை செய்தனர்.
கொலை தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தியதில், சிறுமியின் தந்தை ஆரம்பத்தில் தங்கள் வீட்டிற்கு வெளியே வான்வழி துப்பாக்கிச் சூட்டின்போது, தோட்டாக்களால் தாக்கப்பட்டதாகவும், மருத்துவமனைக்கு விரைந்த நிலையில் மகள் இறந்துவிட்டதாகவும் கூறினார். பின்னர் விசாரணையில் தனது மகள் டிக்டாக் விடியோ எடுப்பதை நிறுத்தவில்லை அதனால் கொன்றதாக ஒப்புக்கொண்டதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பாகக் கொலை செய்த இருவரையும் போலீஸார் கைது செய்தனர். குவெட்டா பகுதியில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.