ஐபிஎல் 2025: சிஎஸ்கே விளையாடும் போட்டிகள் முழு விவரம்!
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் தனது முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது.
ஐபிஎல் தொடருக்கான அதிகாரபூர்வ அட்டவணை இன்று (பிப்ரவரி 16) வெளியானது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி மே 25 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்த்து விளையாடுகிறது.
இதையும் படிக்க:ஐபிஎல் தொடருக்கான அதிகாரபூர்வ அட்டவணை வெளியீடு!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வருகிற மார்ச் 23 ஆம் தேதி அதன் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை சேப்பாக்கம் மைதானத்தில் சந்திக்கிறது.
& ,
— Chennai Super Kings (@ChennaiIPL) February 16, 2025
2⃣0⃣2⃣5⃣- Here we come! #WhistlePodu#TheSummerIsComingpic.twitter.com/Qx15ZejJhk
ஐபிஎல் 2025 - சிஎஸ்கே போட்டிகள் விவரம்
மார்ச் 23 - மும்பை இந்தியன்ஸ், சென்னை
மார்ச் 28 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சென்னை
மார்ச் 30 - ராஜஸ்தான் ராயல்ஸ், குவாஹாட்டி
ஏப்ரல் 5 - தில்லி கேபிடல்ஸ், சென்னை
ஏப்ரல் 8 - பஞ்சாப் கிங்ஸ், சண்டீகர்
ஏப்ரல் 11 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை
ஏப்ரல் 14 - லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ், லக்னௌ
ஏப்ரல் 20 - மும்பை இந்தியன்ஸ், மும்பை
ஏப்ரல் 25 - சன் ரைசர்ஸ் ஹைதராபாத், சென்னை
ஏப்ரல் 30 - பஞ்சாப் கிங்ஸ், சென்னை
மே 3 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பெங்களூரு
மே 7 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கொல்கத்தா
மே 12 - ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை
மே 18 - குஜராத் டைட்டன்ஸ், அகமதாபாத்