Rohit Sharma : 'கேட்ச்சை விட்டதுக்கு தண்டனையா அக்சரை டின்னர் கூட்டிட்டு போறேன்' ...
இருவர் சதம், பிலிப்ஸ் அதிரடி அரைசதம்..! பாகிஸ்தானுக்கு 321 ரன்கள் இலக்கு!
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 321 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் ரிஸ்வான் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
முதல் 10 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழந்த நியூசிலாந்து அணி பிறகு நன்றாக விளையாடியது. வில் யங், டாம் லாதம் இருவரும் சதமடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்கள்.
கடைசியில் க்ளென் பிலிப்ஸ் அதிரடியாக விளையாடி 34 பந்துகளில் அரைசதம் கடந்து 61 ரன்களில் ஆட்டமிழந்தார்.
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 320 ரன்கள் எடுத்தது.
பாகிஸ்தான் சார்பில் நசீம் ஷா, ஹாரிஷ் ரவுஃப் தலா 2 விக்கெட்டுகள், அப்ரார் அஹமது 1 விக்கெட்டும் எடுத்தார்கள்.
நியூசிலாந்து ஸ்கோர் கார்டு
வில் யங் - 107
டெவான் கான்வே - 10
கேன் வில்லியம்சன் - 1
டேரில் மிட்செல் - 10
டாம் லாதம் - 118*
க்ளென் பிலிப்ஸ் - 61
மைக்கேல் பிரேஸ்வெல் - 0*