முகமது அசாருதீன் சாதனையை சமன் செய்த விராட் கோலி!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீனின் சாதனையை விராட் கோலி சமன் செய்துள்ளார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இன்றையப் போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் வங்கதேசம் 228 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது.
இதையும் படிக்க: அதிவேக 11,000* ரன்கள்..! சச்சின் சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா!
சாதனை சமன்
இன்றையப் போட்டியில் ஃபீல்டிங்கின்போது, விராட் கோலி இரண்டு கேட்ச்சுகளைப் பிடித்தார். இதன் மூலம், ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீனின் சாதனையை விராட் கோலி சமன் செய்துள்ளார்.
இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் முகமது அசாருதீன் 156 கேட்ச்சுகளைப் பிடித்துள்ளார். இந்த சாதனையை விராட் கோலி தற்போது சமன் செய்துள்ளார்.
இதையும் படிக்க: அதிவேகமாக 200 விக்கெட்டுகள் வீழ்த்தி முகமது ஷமி சாதனை!
இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அதிக கேட்ச்சுகள் பிடித்த வீரர்கள்
முகமது அசாருதீன் - 156 கேட்ச்சுகள்
விராட் கோலி - 156* கேட்ச்சுகள்
சச்சின் டெண்டுல்கர் - 140 கேட்ச்சுகள்
ராகுல் டிராவிட் - 124 கேட்ச்சுகள்
சுரேஷ் ரெய்னா - 102 கேட்ச்சுகள்