செய்திகள் :

பாகிஸ்தானில் வெவ்வேறு சாலை விபத்துகள்: 16 பேர் பலி, 45 பேர் காயம்

post image

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் நடந்த இருவேறு சாலை விபத்துகளில் 16 பேர் பலியாகினர்.

சிந்துவின் ஷாஹீத் பெனாசிராபாத் மாவட்டத்தில் உள்ள குவாசி அகமது நகருக்கு அருகே சென்றுகொண்டிருந்த வேன் டிரெய்லருடன் சனிக்கிழமை மோதியது. இந்த விபத்தில் 5 பேர் பலியானார்கள். மேலும் 10 பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து குவாசி அகமது காவல் அதிகாரி வசீம் மிர்சா கூறுகையில், ஜாம்ஷோரோ மாவட்டத்தின் செஹ்வான் நகரில் உள்ள லால் ஷாபாஸ் கலந்தர் சன்னதிக்கு வேன் வேகமாக சென்று கொண்டிருந்தது.

அப்போது வேன் முதலில் ஒரு கழுதை வண்டி மீது மோதியது. அதைத்தொடர்ந்து எதிர்புறத்தில் இருந்து வந்த டிரெய்லருடனும் மோதியது.

மற்றொரு விபத்தில், மாகாணத்தின் கைர்பூர் மாவட்டம், ராணிபூர் அருகே நடந்த சாலை விபத்தில் 11 பேர் பலியாகினர்.

இருமொழிக் கொள்கையை யாராலும் அசைத்துப் பார்க்க முடியாது: டி. ஜெயக்குமார்

35 பேர் காயமடைந்தனர். தேசிய நெடுஞ்சாலையில் புரேவாலாவில் இருந்து வந்த பேருந்து ரிக்ஷா மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

பலியான பயணிகள் அனைவரும் பஞ்சாபின் புரேவாலாவைச் சேர்ந்தவர்கள்.

போக்குவரத்து விதிகளை மீறுவது உள்ளிட்ட முக்கிய காரணங்களால் பாகிஸ்தான் நெடுஞ்சாலைகளில் சாலை விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன.

சிங்கப்பூா்: மலேசிய தமிழருக்கு இன்று தூக்கு

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மலேசியத் தமிழா் பன்னீா் செல்வம் பரந்தாமனுக்கு வியாழக்கிழமை (பிப். 20) மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது. மலேசியாவைச் சோ்ந்த தமிழ் வம்சாவளி இளைஞரான பன்னீா் செல்வம் 52 கிரா... மேலும் பார்க்க

இலங்கை: நீதிமன்றத்தில் நிழல் உலக தாதா கொலை

இலங்கையில் பிரபல நிழல் உலக தாதா கணேமுல்ல சஞ்சீவ நீதிமன்ற வளாகத்தில் சுட்டுக் கொல்லப்பட்டாா். இது தொடா்பாக முன்னாள் ராணுவ வீரா் கைது செய்யப்பட்டுள்ளாா். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: கொழும்பில் உ... மேலும் பார்க்க

‘ஆப்கன் அகதிகள் அனைவரையும் வெளியேற்ற பாகிஸ்தான் திட்டம்’

ஆப்கன் அகதிகள் அனைவரையும் தங்கள் நாட்டை விட்டு வெளியேற்ற பாகிஸ்தான் அரசு திட்டமிட்டுள்ளதாக இஸ்லாமாபாதில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகம் எச்சரித்துள்ளது. இது குறித்து அந்தத் தூதரகம் புதன்கிழமை வெளியிட்டுள்... மேலும் பார்க்க

உக்ரைன் போருக்கு காரணம் ஸெலென்ஸ்கி; டிரம்ப் குற்றச்சாட்டு: பொய் உலகில் வாழ்கிறாா் டிரம்ப் - ஸெலென்ஸ்கி பதிலடி

உக்ரைன் போருக்கு அந்நாட்டு அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கிதான் காரணம் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளாா். இது உக்ரைனுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. அதே நேரத்தில் சுமாா் ... மேலும் பார்க்க

போப் உடல்நிலை கடுமையாக பாதிப்பு? தீவிர நிமோனியா தொற்று..!

ரோம் : போப் பிரான்சிஸ் உடல்நிலை நிமோனியா தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. போப் பிரான்சிஸ் முச்சுக் குழாய் அழற்சியால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இத்தால... மேலும் பார்க்க

வரி ஏய்ப்பு புகாரை தீர்க்க ரூ.2,900 கோடி கொடுக்கும் கூகுள்!

வரி ஏய்ப்பு புகாரைத் தீர்ப்பதற்காக இத்தாலிக்கு 340 மில்லியன் டாலர்கள் கொடுக்க கூகுள் நிறுவனம் உறுதியளித்துள்ளது. தொழில்நுட்ப உலகில் மாபெரும் முன்னணி நிறுவனமான கூகுள் தன் மீதான வரி ஏய்ப்பு விசாரணையைத் ... மேலும் பார்க்க