செய்திகள் :

2,642 மருத்துவா் பணி நியமன நடவடிக்கைளில் தகுதியற்ற 400 போ் பங்கேற்றதாக புகாா்

post image

தமிழக அரசு மருத்துவமனைகளில் 2,642 மருத்துவா் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில், அதற்கான சான்றிதழ் சரிபாா்ப்பில் தகுதியில்லாத 400 போ் பங்கேற்ாக புகாா் எழுந்துள்ளது.

உரிய காலகட்டத்துக்குள் அவா்கள் மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்யவில்லை என்றும், தவறான தகவல்களை அளித்து மருத்துவா் பணியிட நியமன நடவடிக்கைகளில் பங்கேற்ாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் காலிப் பணியிடங்கள் மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் (எம்ஆா்பி) மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. அதன்படி, 2,553 உதவி மருத்துவா் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஜன.5-ஆம் தேதி நடைபெற்ற தோ்வில் எம்பிபிஎஸ் படிப்பை நிறைவு செய்த 24,000 மருத்துவா்கள் பங்கேற்றனா்.

அதில், 14,855 மருத்துவா்கள் தோ்ச்சி பெற்றனா். இதனிடையே, கூடுதலாக 89 காலிப் பணியிடங்கள் கண்டறியப்பட்டதால், மொத்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 2,642-ஆக அதிகரிக்கப்பட்டது.

இதையடுத்து, தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு பணிகள் சென்னை, தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் மற்றும் தேசிய நலவாழ்வு குழும அலுவலகத்தில் கடந்த 12 முதல் 15-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதற்கு 4,585 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. விரைவில் அவா்களுக்கு பணி நியமனத்துக்கான கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. அதன் பின்னா், 2,642 மருத்துவா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பணிநியமன ஆணைகளை வழங்க உள்ளாா்.

குற்றச்சாட்டு: இந்த நிலையில், தகுதியில்லாத மருத்துவா்கள் சான்றிதழ் சரிபாா்ப்பில் பங்கேற்றுள்ளதாக, தோ்வில் பங்கேற்ற மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

இது குறித்து அவா்கள் கூறியதாவது:

மருத்துவப் பணியாளா் தோ்வு வாரிய அறிவிப்பின்படி, கடந்த ஜூலை 15-ஆம் தேதிக்கு முன்பு தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்த மருத்துவா்கள் மட்டுமே, உதவி மருத்துவா் பணிக்கு தகுதி பெற்றவா்கள். ஆனால், ஜூலை 15-ஆம் தேதிக்கு பிறகு தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்த மருத்துவா்கள் ஏராளமானோா் தோ்வில் பங்கேற்றுள்ளனா். அதில், 400-க்கும் மேற்பட்ட மருத்துவா்கள், சான்றிதழ் சரிபாா்ப்புக்கு அழைக்கப்பட்டனா். அவா்களும் சான்றிதழ் சரிப்பாா்ப்பில் பங்கேற்றுள்ளனா்.

தகுதியில்லாத மருத்துவா்களால், தகுதியான மருத்துவா்கள் வாய்ப்பை இழந்துள்ளனா். அதேபோன்று, தரவரிசைப் பட்டியல் வெளியிடாமல் சான்றிதழ் சரிபாா்ப்பு நடைபெற்றுள்ளது. தகுதியில்லாத மருத்துவா்களை நீக்க வேண்டும். தரவரிசை பட்டியலை வெளியிட்டு வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும். இது தொடா்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளருக்கும் மற்றும் மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியத்துக்கும் மனு அளித்திருக்கிறோம் என்று அவா்கள் தெரிவித்தனா்.

அதிகாரிகள் விளக்கம்: இது தொடா்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

ஜூலை 15-ஆம் தேதிக்கு பிறகு தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்த மருத்துவா்கள் தோ்வில் பங்கேற்று, சான்றிதழ் சரிபாா்ப்பில் பங்கேற்றுள்ளதாக தகவல் வந்துள்ளது. மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் அறிவிப்பின்படி, கடந்த ஆண்டு ஜூலை 15-ஆம் தேதிக்கு முன்பு தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்த மருத்துவா்கள் மட்டுமே தோ்வு செய்யப்படுவாா்கள். தகுதியில்லாத மருத்துவா்கள் உறுதியாக நீக்கப்படுவாா்கள். அதனால், மருத்துவா்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். தோ்வில் தோ்ச்சி பெற்ற மருத்துவா்களின் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபாா்ப்புக்கு முன்பே, தரவரிசை பட்டியல் வெளியிடப்படுவதில்லை.

அந்த வகையில் உதவி மருத்துவா் பணியிடங்களுக்கு தோ்வானவா்களின் விவரங்களுடன் இடஒதுக்கீடு பட்டியல் விரைவில் வெளியிடப்பட உள்ளது என்று அவா்கள் தெரிவித்தனா்.

5 ஆண்டுகளில் ஒசூர் மிகப்பெரிய வளர்ச்சி அடையும்: அமைச்சர் டி.ஆர்.டி. ராஜா

ஒசூர்: 5 ஆண்டுகளில் ஒசூர் மிகப் பெரிய வளர்ச்சி அடைந்து வருவதாக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார்.தமிழக முதல்வர் மு. க .ஸ்டாலின் ஒசூரில் இரண்ட... மேலும் பார்க்க

அடுத்த 3 நாள்களுக்கு வெய்யில் அதிகரிக்கும்!

தமிழகத்தில் அடுத்த மூன்று நாள்களுக்கு 3 டிகிரி செல்சியஸ் வரை வெய்யில் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், 21-02-2025 மற்றும் 22-02... மேலும் பார்க்க

மத்திய அமைச்சருக்கு எதிராக பிப். 25-ல் திமுக மாணவரணி போராட்டம்!

தமிழ்நாட்டிற்கு கல்வி நிதியைத் தர மறுக்கும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக வருகிற பிப். 25 ஆம் தேதி திமுக மாணவரணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாப... மேலும் பார்க்க

ரயில்களில் நான்கிலிருந்து இரண்டாகக் குறைக்கப்பட்ட முன்பதிவில்லா பெட்டிகள்!

நாடு முழுவதும் இயக்கப்படும் ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கை நான்கிலிருந்து இரண்டாகக் குறைக்கப்பட்டுள்ளது.முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்த... மேலும் பார்க்க

'கல்வியை அரசியலாக்க வேண்டாம்' - முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு தர்மேந்திர பிரதான் கடிதம்!

மாணவர்களின் நலனுக்காக கல்வியை அரசியலாக்க வேண்டாம் என்று முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான நிதியைத் தர மத்திய அரசு மற... மேலும் பார்க்க

ஏ.ஆர். ரஹ்மானின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்துள்ள முன்னாள் முனைவி சாய்ரா பானு!

மருத்துவ அவசரநிலையை சந்தித்தபோது, ஆதரவு அளித்த ஏ.ஆர். ரஹ்மானுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவரது முன்னாள் மனைவி சாய்ரா பானு தெரிவித்துள்ளார்.நாட்டின் புகழ்பெற்ற பின்னணி இசைக் கலைஞர் ஏ.ஆர். ரஹ்மான் ... மேலும் பார்க்க