செல்வப்பெருந்தகைக்கு எதிராக இன்று கார்கே, ராகுலை சந்திக்கும் அதிருப்தி தலைவா்கள்...
ஏ.ஆர். ரஹ்மானின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்துள்ள முன்னாள் முனைவி சாய்ரா பானு!
மருத்துவ அவசரநிலையை சந்தித்தபோது, ஆதரவு அளித்த ஏ.ஆர். ரஹ்மானுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவரது முன்னாள் மனைவி சாய்ரா பானு தெரிவித்துள்ளார்.
நாட்டின் புகழ்பெற்ற பின்னணி இசைக் கலைஞர் ஏ.ஆர். ரஹ்மான் - சாய்ரா பானு தம்பதி, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விவகாரத்துப் பெற்றுத் தனித்தனியே வாழ்ந்து வருகிறார்கள்.
29 ஆண்டு கால திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தில், ரஹ்மானின் லட்சோப லட்ச ரசிகர்களுக்கும் வருத்தம் தான்.
இந்த நிலையில், இருவருமே ஒருவரை ஒருவர் எந்த குற்றச்சாட்டுகளையும் சுமத்தால், புரளிகள் ஏதேனும் வந்தாலும் கூட அதனைக் கண்டித்தும், உண்மையல்ல, தங்களது தனிப்பட்ட சுதந்திரத்துக்கு மதிப்பளிக்கும்படியும்தான் கேட்டுவந்தனர்.
இந்த நிலையில், சில நாள்களுக்கு முன்பு, தான் மருத்துவ சிகிச்கையில் இருப்பதாக, சாய்ரா பானு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.