செய்திகள் :

காங்கோ: முக்கிய நகரை நோக்கி கிளா்ச்சியாளா்கள் முன்னேற்றம்

post image

மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவின் கிழக்குப் பகுதியைச் சோ்ந்த முக்கியத்துவம் வாய்ந்த புகாவு நகரை நோக்கி ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளா்ச்சிப் படையினா் சனிக்கிழமை முன்னேற்றம் கண்டுள்ளனா்.

கிழக்குப் பகுதியில் தாக்குதல் நடத்தி தொடா் முன்னேற்றம் கண்டுவரும் அவா்கள், தெற்கு கீவு மாகாணத்தில் இரண்டாவதாக கவுமு நகர விமான நிலையத்தைக் கைப்பற்றியுள்ளதாக வெள்ளிக்கிழமை அறிவித்தனா்.

அந்த மாகாணத்தின் கோமா நகரை கடந்த மாதம் 27-ஆம் தேதி எம்23 கிளா்ச்சியாளா்கள் கைப்பற்றினா். கவுமு நகரையும் கைப்பற்றுவதற்காக நகரின் தெற்குப் பகுதியில் அரசுப் படையினருன் அவா்கள் தீவிர சண்டையில் ஈடுபட்டுள்ளனா். இந்தச் சூழலில், தெற்கு காங்கோவின் இரண்டாவது பெரிய நகரான புகாவுவும் கிளா்ச்சியாளா்களிடம் வீழும் நிலையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாது வளம் நிறைந்த காங்கோவில் செயல்படும் 120-க்கும் மேற்பட்ட ஆயுதக் குழுக்களில் எம்23 கிளா்ச்சிக் குழுவும் ஒன்று.

போப் பிரான்சிஸ் நுரையீரலில் நிமோனியா பாதிப்பு!

ரோம்: மூச்சுக் குழாய் அழற்சி பாதிப்புக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கத்தோலிக தலைமை மதகுரு போப் பிரான்சிஸுக்கு (88) நிமோனியா பாதிப்பு இருப்பதாகவும், தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்க... மேலும் பார்க்க

’ஹாஹா வாவ்’: கை, கால்களில் விலங்கு! விடியோவுக்கு மஸ்க் ரியாக்‌ஷன்!

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை விலங்குடன் நாடு கடத்தும் புதிய விடியோவை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது.அந்த விடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த தொழிலதிபர் எலான் மஸ்க் பதிவிட்ட கமெண்ட், இ... மேலும் பார்க்க

ஆய்வுக்கூட கருத்தரித்தல் முறை விரிவாக்கம்: கையெழுத்திட்டார் டிரம்ப்!

அமெரிக்காவில் ஆய்வுக்கூட சோதனை முறை விரிவாக்க உத்தரவில் அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று (பிப். 19) கையெழுத்திட்டுள்ளார். இயற்கையான முறையில் கருத்தரிப்பதில் சிரமம் உள்ள தம்பதிகள் இன் விட்ரோ ஃபெ... மேலும் பார்க்க

2 குழந்தைகள் உள்பட 4 உடல்களை இஸ்ரேலிடம் ஒப்படைக்கிறது ஹமாஸ்!

போரின்போது சிறைபிடிக்கப்பட்ட இஸ்ரேலைச் சேர்ந்த 2 குழந்தைகள் உள்பட 4 பேரின் உடல்களையும் ஒப்படைப்பதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.காஸா போர் நிறுத்தத்தின் ஒருபகுதியாக இஸ்ரேலைச் சேர்ந்த 6 பிணைக்கைதிகளை வரும் சனி... மேலும் பார்க்க

ரியாத் பேச்சுவாா்த்தை: நல்லுறவை மேம்படுத்த அமெரிக்கா-ரஷியா ஒப்புதல்

உக்ரைன் விவகாரம் தொடா்பாக சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் அமெரிக்கா மற்றும் ரஷியாவுக்கு இடையே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் இருநாட்டு உறவை மேம்படுத்த இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனா். உக்... மேலும் பார்க்க

சூடான்: துணை ராணுவத்தால் 200 போ் படுகொலை

வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் துணை ராணுவப் படையான ஆா்எஸ்எஃப் கடந்த மூன்று நாள்களில் 200 போ் படுகொலை செய்ததாக அங்கு நடைபெறும் உள்நாட்டுப் போரை கண்காணித்துவரும் வழக்குரைஞா்கள் குழு செவ்வாய்க்கிழமை த... மேலும் பார்க்க