செய்திகள் :

2 குழந்தைகள் உள்பட 4 உடல்களை இஸ்ரேலிடம் ஒப்படைக்கிறது ஹமாஸ்!

post image

போரின்போது சிறைபிடிக்கப்பட்ட இஸ்ரேலைச் சேர்ந்த 2 குழந்தைகள் உள்பட 4 பேரின் உடல்களையும் ஒப்படைப்பதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.

காஸா போர் நிறுத்தத்தின் ஒருபகுதியாக இஸ்ரேலைச் சேர்ந்த 6 பிணைக்கைதிகளை வரும் சனிக்கிழமை விடுவிக்க ஹமாஸ் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், 4 பேரின் உடல்களை வியாழக்கிழமை அனுப்புகிறது.

முன்பு 3 பேரை மட்டுமே விடுவிப்பதாக இருந்த நிலையில், 6 பேரை விடுவிப்பதாக ஹமாஸ் அமைப்பின் முக்கியத் தலைவரான கலீல் அல்-ஹய்யா விடியோ மூலம் தெரிவித்துள்ளார்.

இதனிடையே பிபாஸ் குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் உள்பட 4 பிணைக்கைதிகளின் உடல்களை ஹமாஸ் வியாழக்கிழமை ஒப்படைக்கவுள்ளதை இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

2023 அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் நடத்திய வான்வழித் தாக்குதலில் 1200 பேர் உயிரிழந்தனர். பலர் பிணைக்கைதிகளாக சிறைபிடிக்கப்பட்டனர். அவர்களில் இஸ்ரேலில் வசித்துவரும் ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த பிபாஸ் குடும்பத்தினரும் அடங்குவர். (சிறைபிடிக்கப்பட்டபோது) 9 மாதக் குழந்தை க்ஃபிர் பிபாஸ், 4 வயது குழந்தை ஏரியல், 32 வயது தாய் ஷிரி மற்றும் அவரின் கணவர் யார்டென் (34) ஆகியோர் சிறைபிடிக்கப்பட்டனர்.

இதில், தாய் ஷிரியும் அவரின் குழந்தைகளான க்ஃபிர் பிபாஸ், ஏரியல் ஆகியோர் உயிரிழந்ததாக ஹமாஸ் தெரிவித்திருந்தது. மேலும், தந்தை யார்டென் உயிருடன் இருக்கும் விடியோவையும் வெளியிட்டிருந்தது. அதில், எனது குடும்பம் அழிந்ததற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவே காரணம் எனக் கூறியிருந்தார்.

இது குறித்து அப்போது விளக்கம் அளித்த இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினர் உளவியல் ரீதியாக யார்டெனுக்கு தொல்லை கொடுத்துள்ளதாகவும், பிபாஸ் குடும்பத்தில் யாரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை எனவும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், 2 குழந்தைகள் உள்பட 4 பேரின் உடல்களை இஸ்ரேல் அரசிடம் ஒப்படைப்பதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.

இதையும் படிக்க | சூடான்: துணை ராணுவத்தால் 200 போ் படுகொலை

தாய், 2 குழந்தைகளுடன் 4 பிணைக் கைதிகளின் சடலங்களை ஒப்படைத்தது ஹமாஸ்

இஸ்ரேலில் இருந்து பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்ட தாய், இரு குழந்தைகள் அடங்கிய நான்கு பேரின் சடலங்களை ஹமாஸ் அமைப்பினா் வியாழக்கிழமை ஒப்படைத்தனா். கடந்த மாதம் 19-ஆம் தேதி முதல் அமலில் இருக்கும் ... மேலும் பார்க்க

‘அமெரிக்கா மீதான விமா்சனத்தை மட்டுப்படுத்துங்கள்’

தங்கள் நாட்டின் மீது முன்வைக்கும் விமா்சனங்களை உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி மட்டுப்படுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கான தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மேக்கோல் வால்ட்ஸ் எச்ச... மேலும் பார்க்க

செக் குடியரசு: கத்திக்குத்து தாக்குதலில் 2 பெண்கள் உயிரிழப்பு

மத்திய ஐரோப்பிய நாடான செக் குடியரசில் வியாழக்கிழமை நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் 2 பெண்கள் உயிரிழந்தனா். இது குறித்து போலீஸாா் கூறியதாவது: தலைநகா் ப்ராகுக்கு சுமாா் 100 கி.மீ. தொலைவில் உள்ள ரா... மேலும் பார்க்க

பனாமா ஹோட்டலில் இந்தியர்களை அடைத்து வைத்துள்ள அமெரிக்கா! ஏன்?

சட்டவிரோதமாக குடியேறிய 300-க்கும் மேற்பட்டோரை பனாமா நாட்டிலுள்ள ஹோட்டலில் அமெரிக்கா அடைத்து வைத்துள்ளது.அந்த ஹோட்டலில் அடைத்து வைக்கப்பட்டவர்கள் கண்ணாடி ஜன்னல் வழியாக உதவி கோரும் புகைப்படங்கள் இணையத்த... மேலும் பார்க்க

சிங்கப்பூரில் மலேசிய தமிழருக்கு தூக்கு: கடைசி நேரத்தில் நிறுத்தம்!

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மலேசியத் தமிழா் பன்னீா் செல்வம் பரந்தாமனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை கடைசி நேரத்தில் நிறுத்திவைத்து சிங்கப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பன்னீர் செல்வம் பரந்தா... மேலும் பார்க்க

பிலிப்பின்ஸ்: கொசுவைக் கொன்றால் சன்மானம்!

பிலிப்பின்ஸின் தலைநகா்ப் பகுதியில் பரவிவரும் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்காக, அந்த நோயைப் பரப்பும் கொசுக்களை உயிருடனோ, கொன்றோ பிடித்துத் தருவோருக்கு சன்மானம் அளிக்கப்படும் என்று பிராந்திய நிா... மேலும் பார்க்க