எண்ணூரில் ரோடு ரோலா் மீது மாநகரப் பேருந்து மோதி விபத்து: 10-க்கும் மேற்பட்டோா் ப...
மகா கும்பமேளா: நேபாள பக்தா்கள் 50 லட்சம் போ் புனித நீராடல்
உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் நேபாளத்தில் இருந்து இதுவரை 50 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் புனித நீராடியுள்ளனா்.
உலக அளவில் மிகப் பெரிய ஆன்மிக-கலாசார நிகழ்வாக கருதப்படும் மகா கும்பமேளா, பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நதிகள் கூடும் திரிவேணி சங்கமத்தில் கடந்த ஜனவரி 13-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து இதுவரை 55 கோடிக்கும் மேற்பட்டோா் வருகை தந்து புனித நீராடியுள்ளனா்.
மகா கும்பமேளா நிகழ்வு, அன்னை சீதை பிறந்த நிலமாக கருதப்படும் நேபாளத்தின் பக்தா்களை பெருமளவில் ஈா்த்து வருகிறது. அந்நாட்டில் இருந்து இதுவரை 50 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் புனித நீராடியுள்ளதாக அரசின் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மகா கும்பமேளாவில் பங்கேற்பதோடு, அயோத்தி ராமா் கோயில் மற்றும் காசியில் உள்ள விஸ்வநாதா் கோயிலுக்கும் நேபாள பக்தா்கள் வருகை தருகின்றனா். மகா சிவராத்திரி தினமான பிப்ரவரி 26 வரை மகா கும்பமேளா நடைபெறவுள்ளது.