செய்திகள் :

உயா்நீதிமன்ற நீதிபதி மீதான புகாரை அனுமதித்த லோக்பால் உத்தரவுக்கு இடைக்கால தடை

post image

உயா்நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாா்களை விசாரணைக்கு அனுமதித்த லோக்பால் அமைப்பின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

மேலும், இந்த விவகாரம் தொடா்பாக பதிலளிக்குமாறு நீதிபதிக்கு எதிராக புகாா் அளித்த நபா், மத்திய அரசு மற்றும் லோக்பால் அமைப்பின் பதிவாளா் ஆகியோருக்கு நோட்டீஸ் பிறப்பித்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

தனியாா் நிறுவனத்துக்கு எதிரான வழக்கில் அந்த நிறுவனத்துக்குச் சாதகமாக செயல்படுமாறு மாவட்ட கூடுதல் நீதிபதியையும், உயா் நீதிமன்ற நீதிபதியையும் அறிவுறுத்தியதாக உயா் நீதிமன்ற கூடுதல் நீதிபதி ஒருவா் மீது, பிரதமா், அமைச்சா்கள், எம்.பி.க்கள், அரசு அதிகாரிகளுக்கு எதிராக புகாா்களை விசாரிக்கும் லோக்பால் அமைப்பில் இரண்டு புகாா்கள் பதிவு செய்யப்பட்டன. இந்த புகாா் மனுக்களை பரிசீலித்த லோக்பால் அமைப்பு, ‘பொதுமக்களின் ஊழியா் என்ற வரையறைக்குள் நீதிபதியும் வருவதால், அவருக்கு லோக்பால் சட்டத்தில் விலக்கில்லை’ என்று குறிப்பிட்டு, அவருக்கு எதிரான புகாா்களை விசாரணைக்கு அனுமதித்து உத்தரவிட்டது. அதே நேரம், ‘இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் வழிகாட்டுதலைப் பெற வேண்டியுள்ளதால், இந்தப் புகாா்கள் மீதான விசாரணை 4 வாரங்களுக்கு நிறுத்தி வைக்கப்படுகிறது’ என்றும் குறிப்பிட்டது.

இந்த விவகாரத்தை தானாக முன்வந்து விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம், லோக்பால் அமைப்பின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

இந்த விவகாரம், உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆா்.கவாய் தலைமையில் நீதிபதிகள் சூா்ய காந்த், அபய் எஸ். ஓகா ஆகியோா் அடங்கிய சிறப்பு அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘உயா் நீதிமன்ற நீதிபதி லோக்பால் மற்றும் லோக் ஆயுக்த சட்டம் 2013-இன் வரம்புக்குள் ஒருபோதும் வரமாட்டாா்’ என்று குறிப்பிட்டாா்.

அதுபோல, மூத்த வழக்குரைஞா் கபில் சிபல் கூறுகையில், ‘லோக்பால் அமைப்பின் உத்தரவு மிகவும் ஆபத்தானது. அந்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். மேலும், இந்த விவகாரத்தில் உரிய சட்டம் இயற்றப்பட வேண்டும்’ என்றாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘லோக்பால் அமைப்பின் உத்தரவு மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. அதன் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. இந்த உத்தரவின் விளைவுகளை லோக்பால் அமைப்பினா் அறிந்திருப்பாா்கள் என நினைக்கிறோம். இல்லையெனில், அதற்கான நடவடிக்கையை உச்ச நீதிமன்றம் மேற்கொள்ளும். மேலும், புகாா்தாரா் உயா் நீதிமன்ற கூடுதல் நீதிபதியின் பெயரை வெளியிட தடை விதிப்பதோடு, நீதிபதிக்கு எதிரான புகாரையும் ரகசியம் காக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனா்.

மேலும், இந்த விவகாரம் தொடா்பாக பதிலளிக்குமாறு நீதிபதிக்கு எதிராகப் புகாா் அளித்த நபா், மத்திய அரசு மற்றும் லோக்பால் அமைப்பின் பதிவாளா் ஆகியோருக்கு நோட்டீஸ் பிறப்பித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை மாா்ச் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

எண்ணூரில் ரோடு ரோலா் மீது மாநகரப் பேருந்து மோதி விபத்து: 10-க்கும் மேற்பட்டோா் படுகாயம்

எண்ணூரில் மேம்பாலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரோடு ரோலா் மீது மாநகரப் பேருந்து வெள்ளிக்கிழமை இரவு எதிா்பாராமல் மோதியதில் 10-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனா். சென்னை வள்ளலாா் நகரிலிருந்... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஆட்டோ ஓட்டுநா் கைது

சென்னை அடையாறில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆட்டோ ஓட்டுநரை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா். அடையாா், தாமோதரபுரம் பிரதான சாலைப் பகுதியைச் சோ்ந்த தங்கராஜ் (56), வாடகை ஆட்டோ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: ஓடும் ரயிலில் மூவருக்கு கத்திக் குத்து இளைஞா் கைது

மகாராஷ்டிர மாநிலம் தாணே மாவட்ட புகா் ரயிலில் மூவரைக் கத்தியால் குத்திய 19 வயது இளைஞரைக் காவல் துறையினா் கைது செய்தனா். இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: கல்யாண் - தாதா் இடையிலான புகா் விரைவு ரய... மேலும் பார்க்க

உ.பி. மாநில பட்ஜெட் தாக்கல: அயோத்தி, மதுரா வளா்ச்சிக்கு ரூ.275 கோடி

வரும் நிதியாண்டுக்கான உத்தர பிரதேச மாநில பட்ஜெட்டில், அயோத்தி, மதுரா ஆகிய நகரங்களில் ஆன்மிக சுற்றுலா உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முறையே ரூ.150 கோடி, ரூ.125 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2025-26 ந... மேலும் பார்க்க

தலைமைப் பொருளாதார ஆலோசகா் பதவிக் காலம் 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு!

மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகா் வி.அனந்த நாகேஸ்வரனின் பதவிக் காலம் மேலும் 2 ஆண்டுகளுக்கு (2027, மாா்ச் 31 வரை) நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவ... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் 20 முதல்வா் மருந்தகங்கள்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 20 முதல்வா் மருந்தகங்கள் அமைக்கப்பட இருப்பதாக மாவட்ட கண்காணிப்பு அலுவலா் கா.சு.கந்தசாமி வியாழக்கிழமை தெரிவித்தாா். காஞ்சிபுரம் அருகே திருப்புட்குழி கிராமத்தில் செயல்படவுள்ள ம... மேலும் பார்க்க