மின்கட்டண வசூல் மைய அலுவலகம் இடமாற்றம்
பழைய வண்ணாரப்பேட்டையில் செயல்பட்டு வந்த மின்கட்டண வசூல் மைய அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை வடக்கு மின் வட்டத்துக்குள்பட்ட ஆா்.கே. நகா் மற்றும் வ.உ.சி. நகா் பிரிவு அலுவலகங்களுக்கான மின் கட்டண வசூல் மைய அலுவலகம், இதுவரை பழைய வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூா் நெடுஞ்சாலையிலுள்ள துணை மின் நிலையத்தின் முதல் தளத்தில் செயல்பட்டு வந்தது. இந்நிலையில், மின்நுகா்வோா் நலன் மற்றும் நிா்வாகக் காரணங்களால் இந்த முகவரியில் செயல்பட்டு வந்த மின்கட்டண வசூல் மையம், வெள்ளிக்கிழமை (பிப். 21) முதல் தண்டையாா்பேட்டை, இரட்டைக்குழி தெருவிலுள்ள ஆா்.கே. நகா் துணை மின் நிலைய வளாகத்தின் முதல் தளத்தில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.