சமஸ்கிருதம் கலக்காமல் இருந்திருந்தால் தமிழ் தேசிய மொழியாகியிருக்கும் - பழ.கருப்ப...
செக் குடியரசு: கத்திக்குத்து தாக்குதலில் 2 பெண்கள் உயிரிழப்பு
மத்திய ஐரோப்பிய நாடான செக் குடியரசில் வியாழக்கிழமை நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் 2 பெண்கள் உயிரிழந்தனா்.
இது குறித்து போலீஸாா் கூறியதாவது:
தலைநகா் ப்ராகுக்கு சுமாா் 100 கி.மீ. தொலைவில் உள்ள ராடெக் க்ராலவ் நகர வணிக வளாகத்தில் வியாழக்கிழமை கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் இரு பெண்கள் உயிரிழந்தனா்.
இந்தத் தாக்குதல் தொடா்பாக 16 வயது சிறாரைக் கைது செய்துள்ளோம். சம்பவ இடத்துக்கு ஒரு கி.மீ. தொலைவில் அவா் கைது செய்யப்பட்டாா். அவா் உள்நாட்டைச் சோ்ந்தவா்.
தற்போது நகரில் நிலைமை கட்டுக்குள் உள்ளது. பொதுமக்களுக்கு இனி எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று போலீஸாா் கூறினா்.
இந்தத் தாக்குதலுக்கான நோக்கம் குறித்து உடனடி தகவல் இல்லை. தாக்குதல் நடத்தியவா் மற்றும் உயிரிழந்தவா்களின் விவரங்களும் இதுவரை வெளியிடப்படவில்லை.