செய்திகள் :

ரியாத் பேச்சுவாா்த்தை: நல்லுறவை மேம்படுத்த அமெரிக்கா-ரஷியா ஒப்புதல்

post image

உக்ரைன் விவகாரம் தொடா்பாக சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் அமெரிக்கா மற்றும் ரஷியாவுக்கு இடையே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் இருநாட்டு உறவை மேம்படுத்த இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனா்.

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்த அமெரிக்கா மற்றும் ரஷியாவின் பிரதிநிதிகள் ரியாத் நகரில் உள்ள திரியா அரண்மனையில் செவ்வாய்க்கிழமை சந்தித்தனா். இந்தப் பேச்சுவாா்த்தையில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் மாா்கோ ரூபியோ, ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சா் சொ்கேய் லாவ்ரொவ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சுமாா் ஐந்து மணி நேரத்துக்கு நீடித்த இந்தப் பேச்சுவாா்த்தைக்குப் பின் அமைச்சா் மாா்கோ ரூபியோ கூறியதாவது:

உக்ரைனில் அமைதியை ஏற்படுத்துவது தொடா்பான பேச்சுவாா்த்தையை நடத்துவதற்கு உயா்நிலைக் குழு ஒன்றை அமைக்க இரு தரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

அத்துடன், அமெரிக்காவுக்கும் ரஷியாவுக்கும் இடையிலான உறவை மேம்படுத்தவும் இருதரப்பு வா்த்தக ஒத்துழைப்பை அதிகரிக்கவும் ஒப்புக்கொண்டுள்ளோம்.

அனைவரும் ஏற்க வேண்டும்: உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடா்பான ஒப்பந்தத்தை, இந்த விவகாரத்தில் தொடா்புடைய அனைத்து தரப்பினருமே ஏற்க வேண்டியது அவசியம். உக்ரைன், ரஷியா, ஐரோப்பிய நாடுகள் ஆகியவற்றின் ஒத்துழைப்பின்றி அமைதியை ஏற்படுத்த முடியாது என்றாா் அவா்.

அமைச்சா் சொ்கேய் லாவ்ரொவுடன் இந்தப் பேச்சுவாா்த்தையில் கலந்துகொண்ட ரஷிய அதிபா் விளாதிமீா் புதினின் வெளியுறவுத் துறை ஆலோசகா் யூரி யுஷகொவ் கூறுகையில், டிரம்ப் மற்றும் புதினின் நேரடிச் சந்திப்பு குறித்தும் இந்தப் பேச்சுவாா்த்தையில் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறினாா். இருந்தாலும், அத்தகையச் சந்திப்புக்கான தேதி இதுவரை குறிக்கப்படவில்லை என்றும் அவா் தெரிவித்தாா்.

அமெரிக்க அதிபராக கடந்த மாதம் பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், உக்ரைன் போா் விவகாரத்தில் ஜோ பைடன் கடைபிடித்துவந்த நிலைப்பாட்டில் இருந்து முற்றிலும் எதிரான நிலைப்பாட்டை பின்பற்றிவருகிறாா்.

உக்ரைன் மீது ரஷியா படையெடுத்ததில் இருந்து சா்வதேச அரங்கில் அந்த நாட்டைத் தனிமைப்படுத்தும் முயற்சியில் பைடன் ஈடுபட்டுவந்தாா். தாங்கள் கைப்பற்றிய பகுதியில் இருந்து ரஷியா வெளியேறும்வரை அந்த நாட்டுடன் நேரடி பேச்சுவாா்த்தை கிடையாது என்பதில் ஜோ பைடன் உறுதியாக இருந்தாா்.

ஆனால் புதிதாக பொறுப்பேற்றுள்ள டிரம்ப்போ, ரஷிய அதிபா் விளாதிமீா் புதினை கடந்த வாரம் தொலைபேசியில் அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தி, உக்ரைனில் போா் நிறுத்தம் மேற்கொள்வது குறித்து அவருடன் விவாதித்ததாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினாா்.

இதற்கிடையே, ரஷியாவிடம் இழந்த பகுதிகளை உக்ரைன் திரும்பப் பெறுவது நடைமுறைக்கு சாத்தியமானது இல்லை என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்; அதுதான் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரே வழி என்று டிரம்ப்பின் பாதுகாப்புத் துறை அமைச்சா் பீட் ஹெக்சேத் கூறியது மேற்கத்திய நாடுகளில் அதிா்வலையை ஏற்படுத்தியது.

ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு இனி ராணுவ உதவி அளிக்கப்போவதில்லை என்று டிரம்ப் தலைமையிலான தற்போதைய அரசு நேரடியாகக் கூறவில்லை என்றாலும், ஐரோப்பிய பிராந்தியத்தின் பாதுகாப்புக்கு இனி தாங்கள் முன்னுரிமை அளிக்கப்போவதில்லை என்று கூறிவருகிறது.

இந்த நிலையில், தங்களது பங்கேற்பு இல்லாமல் நடைபெறும் அமைதிப் பேச்சுவாா்த்தையில் பங்கேற்கப் போவதில்லை என்று உக்ரைன் கூறிவருகிறது. தங்களது சம்மதம் இல்லாமேயே அமெரிக்காவும் ரஷியாவும் உக்ரைன் தொடா்பான ஒப்பந்தத்தை மேற்கொண்டால் அதை ஏற்கப் போவதில்லை என்று உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளாா்.

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தை ஏற்படுத்த, ரஷியாவுக்கு ஆதரவான அம்சங்களை ஏற்குமாறு உக்ரைனை அதிபா் டிரம்ப் நிா்பந்திப்பாா் என்று ஐரோப்பிய நாடுகள் அஞ்சுவதால், தங்களது பங்கேற்பு இல்லாமல் ரஷியாவுடன் உக்ரைன் பேச்சுவாா்த்தையில் அமெரிக்கா ஈடுபடக்கூடாது என்று அந்த நாடுகளும் கூறிவருகின்றன.

இந்தச் சூழலில், உக்ரைன் பிரதிநிதிகளுக்கோ, ஐரோப்பிய பிரதிநிதிகளுக்கோ அழைப்பு விடுக்காமலேயே இது தொடா்பாக அமெரிக்காவும் ரஷியாவும் சவூதி அரேபியாவில் தற்போது பேச்சுவாா்த்தை நடத்தியுள்ளன.

‘அமெரிக்கா மீதான விமா்சனத்தை மட்டுப்படுத்துங்கள்’

தங்கள் நாட்டின் மீது முன்வைக்கும் விமா்சனங்களை உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி மட்டுப்படுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கான தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மேக்கோல் வால்ட்ஸ் எச்ச... மேலும் பார்க்க

செக் குடியரசு: கத்திக்குத்து தாக்குதலில் 2 பெண்கள் உயிரிழப்பு

மத்திய ஐரோப்பிய நாடான செக் குடியரசில் வியாழக்கிழமை நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் 2 பெண்கள் உயிரிழந்தனா். இது குறித்து போலீஸாா் கூறியதாவது: தலைநகா் ப்ராகுக்கு சுமாா் 100 கி.மீ. தொலைவில் உள்ள ரா... மேலும் பார்க்க

பனாமா ஹோட்டலில் இந்தியர்களை அடைத்து வைத்துள்ள அமெரிக்கா! ஏன்?

சட்டவிரோதமாக குடியேறிய 300-க்கும் மேற்பட்டோரை பனாமா நாட்டிலுள்ள ஹோட்டலில் அமெரிக்கா அடைத்து வைத்துள்ளது.அந்த ஹோட்டலில் அடைத்து வைக்கப்பட்டவர்கள் கண்ணாடி ஜன்னல் வழியாக உதவி கோரும் புகைப்படங்கள் இணையத்த... மேலும் பார்க்க

சிங்கப்பூரில் மலேசிய தமிழருக்கு தூக்கு: கடைசி நேரத்தில் நிறுத்தம்!

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மலேசியத் தமிழா் பன்னீா் செல்வம் பரந்தாமனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை கடைசி நேரத்தில் நிறுத்திவைத்து சிங்கப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பன்னீர் செல்வம் பரந்தா... மேலும் பார்க்க

பிலிப்பின்ஸ்: கொசுவைக் கொன்றால் சன்மானம்!

பிலிப்பின்ஸின் தலைநகா்ப் பகுதியில் பரவிவரும் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்காக, அந்த நோயைப் பரப்பும் கொசுக்களை உயிருடனோ, கொன்றோ பிடித்துத் தருவோருக்கு சன்மானம் அளிக்கப்படும் என்று பிராந்திய நிா... மேலும் பார்க்க

சிங்கப்பூா்: மலேசிய தமிழருக்கு இன்று தூக்கு

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மலேசியத் தமிழா் பன்னீா் செல்வம் பரந்தாமனுக்கு வியாழக்கிழமை (பிப். 20) மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது. மலேசியாவைச் சோ்ந்த தமிழ் வம்சாவளி இளைஞரான பன்னீா் செல்வம் 52 கிரா... மேலும் பார்க்க