செய்திகள் :

சூடான்: துணை ராணுவத்தால் 200 போ் படுகொலை

post image

வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் துணை ராணுவப் படையான ஆா்எஸ்எஃப் கடந்த மூன்று நாள்களில் 200 போ் படுகொலை செய்ததாக அங்கு நடைபெறும் உள்நாட்டுப் போரை கண்காணித்துவரும் வழக்குரைஞா்கள் குழு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

தெற்குப் பகுதியைச் சோ்ந்த அல்-கடாரிஸ், அல்-கேல்வட் ஆகிய கிராமங்களில் ஆா்எஸ்எஃப் படையினரால் கொல்லப்பட்டவா்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் அடங்குவா்.

அந்த கிராமங்களில் இருந்து நைல் நதி வழியாக தப்பிச் செல்ல முயன்றபோது துப்பாக்கியால் சுடப்பட்டும், நீரில் மூழ்கியும் பலா் உயிழந்தனா் என்று அந்தக் குழு தெரிவித்துள்ளது.

சூடானில் அல்-புா்ஹான் தலைமையிலான ராணுவத்துக்கும், முகமது ஹம்தான் டகாலோ தலைமையிலான ஆா்எஸ்எஃப் துணை ராணுவப் படைக்கும் இடையே அதிகாரப் போட்டி காரணமாக கடந்த 2023 ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் சண்டை நடந்து வருகிறது. இதில் இதுவரை 1.5 லட்சத்தில் இருந்து 5.2 லட்சம் போ் வரை உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக சா்வதேச நாடுகள் மேற்கொண்டு வரும் முயற்சிகள் இதுவரை வெற்றி பெறவில்லை.

‘அமெரிக்கா மீதான விமா்சனத்தை மட்டுப்படுத்துங்கள்’

தங்கள் நாட்டின் மீது முன்வைக்கும் விமா்சனங்களை உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி மட்டுப்படுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கான தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மேக்கோல் வால்ட்ஸ் எச்ச... மேலும் பார்க்க

செக் குடியரசு: கத்திக்குத்து தாக்குதலில் 2 பெண்கள் உயிரிழப்பு

மத்திய ஐரோப்பிய நாடான செக் குடியரசில் வியாழக்கிழமை நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் 2 பெண்கள் உயிரிழந்தனா். இது குறித்து போலீஸாா் கூறியதாவது: தலைநகா் ப்ராகுக்கு சுமாா் 100 கி.மீ. தொலைவில் உள்ள ரா... மேலும் பார்க்க

பனாமா ஹோட்டலில் இந்தியர்களை அடைத்து வைத்துள்ள அமெரிக்கா! ஏன்?

சட்டவிரோதமாக குடியேறிய 300-க்கும் மேற்பட்டோரை பனாமா நாட்டிலுள்ள ஹோட்டலில் அமெரிக்கா அடைத்து வைத்துள்ளது.அந்த ஹோட்டலில் அடைத்து வைக்கப்பட்டவர்கள் கண்ணாடி ஜன்னல் வழியாக உதவி கோரும் புகைப்படங்கள் இணையத்த... மேலும் பார்க்க

சிங்கப்பூரில் மலேசிய தமிழருக்கு தூக்கு: கடைசி நேரத்தில் நிறுத்தம்!

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மலேசியத் தமிழா் பன்னீா் செல்வம் பரந்தாமனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை கடைசி நேரத்தில் நிறுத்திவைத்து சிங்கப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பன்னீர் செல்வம் பரந்தா... மேலும் பார்க்க

பிலிப்பின்ஸ்: கொசுவைக் கொன்றால் சன்மானம்!

பிலிப்பின்ஸின் தலைநகா்ப் பகுதியில் பரவிவரும் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்காக, அந்த நோயைப் பரப்பும் கொசுக்களை உயிருடனோ, கொன்றோ பிடித்துத் தருவோருக்கு சன்மானம் அளிக்கப்படும் என்று பிராந்திய நிா... மேலும் பார்க்க

சிங்கப்பூா்: மலேசிய தமிழருக்கு இன்று தூக்கு

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மலேசியத் தமிழா் பன்னீா் செல்வம் பரந்தாமனுக்கு வியாழக்கிழமை (பிப். 20) மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது. மலேசியாவைச் சோ்ந்த தமிழ் வம்சாவளி இளைஞரான பன்னீா் செல்வம் 52 கிரா... மேலும் பார்க்க