சூரியசக்தி மின் உற்பத்தி நிலையங்கள்: இந்தியா-இலங்கை இடையே உடன்பாடு
ஆய்வுக்கூட கருத்தரித்தல் முறை விரிவாக்கம்: கையெழுத்திட்டார் டிரம்ப்!
அமெரிக்காவில் ஆய்வுக்கூட சோதனை முறை விரிவாக்க உத்தரவில் அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று (பிப். 19) கையெழுத்திட்டுள்ளார்.
இயற்கையான முறையில் கருத்தரிப்பதில் சிரமம் உள்ள தம்பதிகள் இன் விட்ரோ ஃபெர்ட்டிலைசேஷன் எனப்படும் ஆய்வுக்கூட சோதனை முறையில், கருத்தரிக்கலாம்.
அதிபர் டிரம்ப் இன்று இந்த உத்தரவில் கையெழுத்திட்டதன் மூலம் ஆய்வுக்கூட சோதனை முறை போன்ற சிகிச்சையில் கொள்கை திட்டங்கள் வலுவாகும் என்றும், சுகாதார திட்டச் செலவு குறையும் எனவும் கூறப்படுகிறது.
இன் விட்ரோ ஃபெர்ட்டிலைசேஷன் (ஐவிஎஃப்) என்னும் ஆய்வுக்கூட சோதனை முறையானது, ஆய்வகத்தில் முட்டை மற்றும் விந்தணுக்களை இணைத்து, பின்னர் அதனை பெண்கள் கருப்பையில் வைத்து கருத்தரிக்க உதவும் இனப்பெருக்க நுட்பமாகும்.
அமெரிக்காவில் இந்தவகை சிகிச்சைக்காக ஒரு சுழற்சிக்கு 12 ஆயிரம் முதல் 25 ஆயிரம் டாலர்கள் செலவாகிறது. பல சுழற்சி சிகிச்சைக்குப் பிறகே கருத்தரித்தல் சாத்தியமாகும்.