மாலி: தங்கச் சுரங்கம் சரிந்து 42 பேர் பலி!
மாலி நாட்டில் தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட சரிவு விபத்தால் 42 பேர் பலியாகினர்.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலி நாட்டில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்ததாகக் கூறப்படும் தங்கச் சுரங்கத்தில் சனிக்கிழமை (பிப். 15) ஏற்பட்ட சரிவு விபத்தில் 42 பேர் பலியானதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. விபத்தின்போது, 1,800 பேர் சுரங்கத்தினுள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் பெரும்பாலானோர் காயமடைந்துள்ளனர்.
சீன நாட்டினர்தான் இந்தச் சுரங்கத்தை செயல்படுத்தி வருவதாக உள்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆப்பிரிக்காவில் சட்டவிரோத சுரங்கங்களை தடுக்க அந்நாட்டு அரசு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டாலும், இதுவரையில் முழுமையான தீர்வு கிடைத்தபாடில்லை.
இந்த மாலி விபத்து, ஒரே மாதத்தில் நடந்த இரண்டாவது விபத்து. இதே பகுதியில் கடந்தாண்டு ஜனவரி மாதம் நிகழ்ந்த சரிவு விபத்தில் 70-க்கும் அதிகமானோர் பலியாகினர். மாலி நாட்டின் மக்கள்தொகையில் 10 சதவிகிதத்துக்கும் அதிகமானோர்
(2 மில்லியனுக்கும் அதிகமானோர்) வருமானத்துக்காக சுரங்கத் துறையை நம்பியுள்ளனர்.
இதையும் படிக்க:கால்களைச் சங்கிலியால் கட்டி... நாடு கடத்தப்பட்டுள்ள இந்தியர்களுக்கு விமானத்தில் கொடுமை!