செய்திகள் :

அமெரிக்காவிலிருந்து 3-ஆம் கட்டமாக நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் தாயகம் திரும்பினர்!

post image

அமிர்தசரஸ் : அமெரிக்காவிலிருந்து மூன்றாம் கட்டமாக 100-க்கும் மேற்பட்ட இந்தியர்களுடன் புறப்பட்ட விமானம் ஒன்று, இன்று(பிப். 16) இரவு இந்தியா வந்திறங்கியுள்ளது.

முன்னதாக, முதல்கட்டமாக அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 104 இந்தியர்களும் இம்மாதம் 5-ஆம் தேதி அமிர்தசரஸ் வந்திறங்கிய நிலையில், அவர்கள் கைகளில் விலங்கு பூட்டியும் கால்களைச் சங்கிலியால் கட்டியும் அவர்களை விமானத்தில் தாயகம் அனுப்பி வைத்த கொடுமை அரங்கேறியுள்ளது.

இந்த நிலையில், அமெரிக்காவிலிருந்து சி-17 விமானத்தில் சனிக்கிழமை(பிப். 15) நள்ளிரவு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள விமான நிலையத்துக்கு வந்தடைந்த 117 இந்தியர்களும் இதே பாணியில் சிறைக் கைதிகளைப் போன்று நடத்தப்பட்டுள்ள விதம் கவலையளிக்கச் செய்கிறது.

இவ்விவகாரம் நாடெங்கிலும் பேசுபொருளானது. அமெரிக்க அரசின் நடவடிக்கைக்கு அரசியல் தலைவர்கள் பலரும், அதிலும் குறிப்பாக எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தோர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். அதனைத்தொடர்ந்து, இது குறித்து மத்திய அரசு தரப்பிலிருந்து டிரம்ப் நிர்வாகத்திடம் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், மூன்றாம் கட்டமாக நாடு கடத்தப்பட்ட 112 இந்தியர்களுடன் அமிர்தசரஸ் விமான நிலையத்துக்கு இன்று இரவு 10 மணியளவில் வந்துள்ள விமானத்திலும் இதே பாணியில் இந்தியர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனரா என்பது குறித்த தகவல் இன்னும் வெளியகவில்லை.

சிறுமிகள் பாலியல் கொலை வழக்கு- மேற்கு வங்கத்தில் 6 மாதத்தில் 6 பேருக்கு தூக்கு தண்டனை விதிப்பு

மேற்கு வங்க மாநிலத்தில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, கொலை வழக்குகளில் கடந்த 6 மாதங்களில் 6 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் கடந்த 6 மாதங்களில் 7 தூக்கு தண்டனைகள... மேலும் பார்க்க

பாதுகாப்பு ரீதியிலான முக்கிய தகவல்களை பாகிஸ்தான் உளவாளிகளிடம் பகிா்ந்த மூவா் கைது- என்ஐஏ நடவடிக்கை

நாட்டின் பாதுகாப்பு தொடா்புடைய முக்கிய தகவல்களை பாகிஸ்தான் உளவாளிகளிடம் பகிா்ந்ததாக கா்நாடகம், கேரளத்தில் 3 பேரை தேசிய பாதுகாப்பு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் கைது செய்துள்ளனா். இது தொடா்பாக என்ஐஏ புதன்கி... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் கடும் தண்ணீா் பஞ்சம்: பொதுமக்கள் ஒத்துழைக்க முதல்வா் வேண்டுகோள்

ஜம்மு-காஷ்மீா் மாநிலத்தில் தற்போது கடுமையான தண்ணீா் பஞ்சம் நிலவி வருவதால், நீரைச் சிக்கனமாகக் பயன்படுத்தி அரசுக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று மாநில முதல்வா் ஒமா் அப்துல்லா தெரிவித்துள்ளாா். பருவ... மேலும் பார்க்க

90,000 சிறைக் கைதிகள் புனித நீராட உ.பி. அரசு ஏற்பாடு!

உத்தர பிரதேச மாநிலத்தின் 75 சிறைகளில் உள்ள 90,000 சிறைக்கைதிகள், மகா கும்பமேளா நடைபெற்று வரும் திரிவேணி சங்கமத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட கங்கை நதியின் புனித நீரில் நீராடுவதற்கு மாநில சிறைத் துறை நி... மேலும் பார்க்க

உயா்நீதிமன்ற நீதிபதி மீதான ஊழல் குற்றச்சாட்டு: உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை

உயா்நீதிமன்ற நீதிபதி மீதான ஊழல் குற்றச்சாட்டில் லோக்பால் அமைப்பு பிறப்பித்த உத்தரவு குறித்து தாமாக முன்வந்து விசாரணை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் புதன்கிழமை முடிவு செய்தது. அதன்படி இந்த விவகாரத்தை உச்சநீத... மேலும் பார்க்க

அரசுப் பணியாளா்கள் மீதான ஊழல் புகாா்: புதிய நடைமுறை வெளியீடு

அரசுப் பணியாளா்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடா்பாக லோக்பால் அமைப்பால் பரிந்துரைக்கப்படும் புகாா்களை விசாரிப்பதற்கான புதிய நடைமுறைகளை மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (சிவிசி) வெளிட்டது. அரசுப் பணிய... மேலும் பார்க்க