தமிழ்நாட்டில் எப்போதும் இருமொழிக் கொள்கைதான்: எடப்பாடி பழனிசாமி
மும்மொழிக் கொள்கையைக் கட்டாயப்படுத்துவது சரியல்ல அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
வேலூர் கோட்டை மைதானத்தில் அ.தி.மு.க இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் நடைபெறும் `இலக்கு 2026’ லட்சிய மாநாட்டில் கட்சிப் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி பேசியதாவது, ``மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு கூறுவது சரியல்ல.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, இருமொழிக் கொள்கைதான், இதில் மாற்றமில்லை. மும்மொழிக் கொள்கையை ஏற்க கட்டாயப்படுத்துவது சரியல்ல. தேசியக் கல்விக் கொள்கையை கடைப்பிடித்தால்தான் நிதி ஒதுக்கப்படும் என்று சொல்வது சரியல்ல. தமிழ்நாட்டில் இருக்கும் ஆட்சியாளர்களைப் பார்க்காதீர்கள்; மக்களைப் பார்த்து நிதி ஒதுக்குங்கள்’’ என்று தெரிவித்தார்.
மும்மொழிக் கொள்கையை வலியத் திணிப்பதன் மூலம், மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிக்கப்படுவதாகக் கூறி, மும்மொழிக் கொள்கைக்கு தவெக தலைவர் விஜய்யும் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க:வியாபாரத்தில் மட்டும் மும்மொழிக் கொள்கை தேவையா? தவெக தலைவர் விஜய்க்கு தமிழிசை கேள்வி!