மியான்மர் சைபர் குற்ற முகாமில் சிக்கியிருந்த 13 இலங்கையர்கள் மீட்பு!
மியான்மர் சைபர் குற்ற முகாமில் சிக்கியிருந்த 13 இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
மியான்மரில் சைபர் குற்ற முகாம்களில் வலுகட்டாயமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 17 இலங்கையர்களில் 13 பேர் கொண்ட குழுவினர் மீட்கப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்டவர்கள் 20 முதல் 30 வயதுக்குள்பட்ட 11 இளைஞர்களும் 2 இளம் பெண்களும் அடங்குவர். அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் தாய்லாந்து எல்லையில் இருந்து பாங்காக்கில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு விரைவில் அழைத்து வரப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, அவர்கள் இலங்கை திரும்புவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: காதலர் தினத்தில் நிமிடத்துக்கு 581 சாக்லெட், 607 கேக் விற்பனை!
இதனிடையே, மியான்மரில் தனித்தனி சைபர் குற்ற முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன மற்ற 4 இலங்கையர்களை மீட்கும் முயற்சியில் வெளியுறவுத் துறை அமைச்சகம் ஈடுபட்டு வருவதாக தகவல் தெரியவந்துள்ளது.
இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் விஜித ஹேரத், அண்மையில் நடைபெற்ற தாய்லாந்து வெளியுறவுத் துறை அமைச்சர் மற்றும் மியான்மர் துணைப் பிரதமர் உடனான பேச்சுவார்த்தையில், இலங்கையர்களை மீட்பதற்கான உதவியினை கோரியிருந்தார்.
இதன் விளைவாக மியான்மரில் இருந்து 13 இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.