குடியரசுத் தலைவருடன் பிரதமர் மோடி சந்திப்பு!
புது தில்லி : குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை இன்று(பிப். 16) பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசியுள்ளார். ராஷ்திரபதி பவனில்(குடியரசுத் தலைவர் மாளிகை) இன்று மாலை இருவரும் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.
தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள பாஜக அரசின் பதவியேற்பு விழா பிப்.19 அல்லது 20-ஆம் தேதி நடைபெறும் என்று அக்கட்சித் தலைவா்கள் தெரிவித்துள்ளனா்.
இதனிடையே அமெரிக்காவுக்கு சென்று அந்நாட்டின் புதிய அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சந்தித்து பேசிவிட்டு வந்துள்ள பிரதமர் மோடி, மரியாதை நிமித்தமாக இன்று குடியரசுத் தலைவரை சந்தித்து பேசியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.