வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் பணி ஜூன் மாதத்துக்குள் முடிக்க திட்டம்
ஆண்பாவம் பெயரில் ரியோ நடிக்கும் புதிய படம்!
நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படத்துக்கு 'ஆண்பாவம் பொல்லாதது' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பு இன்று(பிப். 16) மாலை வெளியாகியுள்ளது.
ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்சன்ஸ் நிறுவன பெயரில் ‘வேடிக்காரன்பட்டி’ எஸ். சக்திவேல் தயாரிப்பில் கலையரசன் தங்கவேல் இயக்கியுள்ள ஆண்பாவம் பொல்லாதது படத்துக்கு சித்து குமார் இசையமைக்கிறார். மாளவிகா மனோஜ் கதாநாயகியாக நடிக்கிறார்.
காதல் திரைக்கதை பின்னணியில் எடுக்கப்பட்டு வரும் இப்படம் இன்றைய கால இளைஞர்களை கவரும் விதத்தில் எடுக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. படத்தின் போஸ்டரும் அதை வெளிக்காட்டுகிறது.
