5 ஆண்டுகளில் ஒசூர் மிகப்பெரிய வளர்ச்சி அடையும்: அமைச்சர் டி.ஆர்.டி. ராஜா
செகந்திராபாத் - ராமநாதபுரம் ரயில் ரத்து
செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
செகந்திராபாத்தில் இருந்து இரவு 9.10-க்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 07695), மறுநாள் காலை 11 மணிக்கு சென்னை எழும்பூருக்கும், இரவு 11.45-க்கு ராமநாதபுரத்துக்கும் சென்றடையும். இந்த ரயிலுக்கான இணைப்பு ரயில் தாமதமாக வருவதால், புதன்கிழமை இரவு புறப்பட வேண்டிய ரயில் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.